Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி!

Jun 16, 2026 - 02:48 PM

ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி!
Mobitel Inner 1278

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கரகாட்டக்காரன் படம் வெளியாகி 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

மக்கள் நாயகன், ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் வெளியாகி இன்று (16) உடன் 37 ஆண்டு முடிந்து 38 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 38, 40, 50 இன்னும் நூறாண்டு ஆனாலும் போற்றி புகழக்கூடிய ஒரு ஜனரஞ்சகமான படம்தான் இந்த கரகாட்டக்காரன். 1989 ஜூன் 16 ஆம் நாள் இப்படம் வந்தது. பிரபல கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதை பட்டி டிங்கரிங் பார்த்து பின்பு படமாக வந்து வெற்றிபெற்றது. பின்பு அதையும் பட்டி டிங்கரிங் பார்த்து, அந்த கதையின் நாதஸ்வர கோஷ்டியை ஜனரஞ்சகமாக கரகாட்ட கோஷ்டியாக மாற்றி இன்னும் கொஞ்சம் காமெடியாக ஸ்கிரிப்டை மெருகேற்றி இயக்குனர் கங்கை அமரனால் இயக்கப்பட்ட படம்தான் இது. 

ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தில்லானா மோகனாம்பாளில் சிவாஜிக்கு உதவியாய் வரும் பாலையா போல இதில் ராமராஜனுக்கு கவுண்டமணியை களமிறக்கி இருந்தார் கங்கை அமரன். நல்ல காமெடி நட்சத்திரங்களை களமிறக்கி இசைக்கு இளையராஜாவை களமிறக்கி அதிபயங்கர வெற்றியை பெற்ற திரைப்படம் தான் கரகாட்டக்காரன். மக்கள் நாயகன் ராமராஜன் வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வசூல் நாயகனாக வலம் வந்த நிலையில் அவருக்கு மேலும் மகுடம் சூட்டும் விதமாக அவரின் 18 ஆவது படமாக இப்படம் வந்து வெற்றி பெற்றது. 

வாழைப்பழ காமெடி, வெற்றிலை காமெடி என இப்படத்தில் வீரப்பன் எழுதிய காமெடி இன்றும் அனைவரும் வாய் விட்டு சிரித்து ரசிக்கும் காமெடிகள் ஆகும். மதுரையை சேர்ந்த கரகாட்டக்குழுவான காட்டுராணி கரகாட்டக்குழு, டான்ஸர் லூர்துசாமி இவர்கள் இந்த படத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு பயிற்சி கொடுத்திருந்தனர். இப்படம் வெளிவந்து 400 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது. 

கங்கை அமரன் 19 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் 17 படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். அதில் கங்கை அமரன் இயக்கி மிகவும் வெற்றியடைந்த ஒரு படம் தான் கரகாட்டக்காரன். இந்தப் படம் 1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தை கங்கை அமரன் இயக்குவதற்காக இளையராஜாரிடம் நான் கரகாட்டக்காரன் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கப் போகிறேன் என்று கூறி இருக்கிறார். 

அதற்கு இளையராஜா அது என்ன படம் அந்த மாதிரி பெயர் வைத்தால் ஓடுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் நீங்கள் அந்த படத்திற்கு பாட்டு மட்டும் எனக்கு ரெடி பண்ணி கொடுங்க என்று கேட்டிருக்கிறார். இளையராஜாவும் கதையே கேட்காமல் 9 பாட்டுகள் ரெடி பண்ணி கொடுத்து இருக்கிறார். 

அப்படி கொடுத்த ஒன்பது பாட்டுகளுமே இன்றுவரை கேட்கும்போதெல்லாம் நம்மளை மெய்மறக்க செய்கிறது. அந்த அளவிற்கு இந்த பாடல்கள் அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப் படத்தின் பாடலுக்காகவே இதற்கு வெற்றி விழா கிடைத்தது. அதிலும் முக்கியமாக சொல்லக்கூடியது அந்த காலத்தில் ஒவ்வொரு பாடலும் 6 நிமிடங்கள் இருக்கும். அப்படி பார்த்தா 9 பாடல்களும் சேர்ந்து 54 நிமிடங்கள் ஆகும் பாட்டுக்கு மட்டுமே. 

இதில் செந்தில் கவுண்டமணி நகைச்சுவை மட்டும் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கும். மீதி இருக்கிற ஒரு மணி நேரத்தில் அழகாக கதையை சொல்லி திரைக்கதை அமைத்தது கங்கை அமரனின் பெரிய சாமர்த்தியம் என்றே சொல்லலாம். கரகாட்டக்காரன் படத்தின் வெற்றியை பார்த்து அந்த காலகட்டத்தில் சூப்பர்ஸ்டார்களாக இருந்த ரஜினி, கமலே மிரண்டுபோனார்களாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278