Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
ஏனைய பொருட்களின் வரி அதிகரிக்கும் பொழுது விசித்திரமாக சிகரெட்டின் வரி மட்டும் குறைந்துள்ளது!

Jun 11, 2026 - 04:27 PM

ஏனைய பொருட்களின் வரி அதிகரிக்கும் பொழுது விசித்திரமாக சிகரெட்டின் வரி மட்டும் குறைந்துள்ளது!
Mobitel Inner 1278

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து, இலங்கை தனது வருமானத்தினை அதிகரிப்பதற்காக பொருட்களினதும் சேவைகளினதும் வரிகளை உயர்த்தியது. 

இதில் விசித்திரமான முரண்பாடு யாதெனில், சிகரெட்டின் வரி விகிதம் குறைவடைந்தது. 

ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் வரி விகிதம் 7.2% புள்ளிகளால் குறைந்துள்ளது. அரசாங்க கொள்கைப்படி வருடத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவீனங்கள் ரூபாய் 17.3 பில்லியன் இவ் வரி விதிக்கப்படாமையினால் ஆண்டுதோறும் இழப்பீடு ஏற்படுகிறது. 

இத் தொகையினை அரசாங்கம் இலகுவாக, உலக சுகாதார தாபனம் (WHO) பரிந்துரைத்த சிகரெட் வரி அளவு விதித்து திரட்டிக் கொள்ளலாம். 

சிகரெட்டினைத் தவிர மற்றைய வரிகள் அனைத்தும் உயர்ந்துள்ளன 

2021 இற்கும் 2026 இற்கும் இடையில், தனியார் மற்றும் நிறுவன வரிகள் உயர்ந்துள்ளன. பெறுமதி சேர் வரி (VAT) 8% இலிருந்து 18% ஆக அதிகரித்தது. 

இதனைவிட மேலதிகமாக 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியாக (SSCL) அறவிடப்படுகிறது. 2024 ஜனவரி மாதத்திலிருந்து மேலதிகமாக 97 பொருட்கள், சேவைகள் மீது பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படுகின்றது. இவை முன்னர் வரி விலக்கப்பட்டவை. 

சிகரெட் தவிர அனைத்திற்கும் வரி உயர்ந்துள்ளது 

2021 இற்கும் 2026 இற்கும் இடையில், வரி விகிதம் 7.2% புள்ளிகளால் குறைந்துள்ளது. இந்த கீழ்நோக்கிய செயற்பாட்டின் வீழ்ச்சி சத்தமில்லாமல் உருவாகவில்லை, மூலம் நிகழ்ந்துள்ளது. 

இது செயற்படாமைவினால் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான சிகரெட் வரி கலால் வரி மூலம் பெறப்படுகிறது. பக்கம் 2 ஒரு சிகரெட்டிற்கு குறிக்கப்பட்ட பெறுமதி அறவிடப்படுகிறது. 

பெறுமதி சேர் வரி (VAT) போலன்றி, விலைகள் உயரும் பொழுது தன்னிச்சையாக உயரமாட்டாது. இதன் விளைவாக, கலால் வரி தொடர்ந்து சரி செய்யப்படாமல் போகும் பொழுது, சிகரெட் உற்பத்தியாளர்கள் விலையினை உயர்த்தும் பொழுது, சில்லறை விலையில் சிகரெட்டின் வரி விகிதம் குறைவடைகின்றது. 

உலக சுகாதார தாபனம் பரிந்துரைத்த கணக்கீட்டின்படி, சிகரெட்டின் சில்லறை விலையின் 75% வரியாக கணக்கிடப்பட வேண்டும். இலங்கை ஒரு தடவை இவ் சர்வதேச அளவுகோலை அண்மித்தது. 2018 இல் வரி விகிதம் 74% ஆக காணப்பட்டது. 

ஆனால் 2026 இல் 66.8% ஆக குறைவடைந்துள்ளது. சர்வதேச அளவுகோலின்படி இலகுவாக கணக்கிடுவோமானால், அண்ணளவாக ஒவ்வொரு 12 ரூபாவிற்கும் 9 ரூபா வரியாக அறவிடப்பட வேண்டும். ஆனால் இன்று இலங்கை அண்ணளவாக 8 ரூபாவினை வரியாக அறவிடுகின்றது. மேற்குறிக்கப்பட்டபடி, இலங்கை அரசாங்கம் சிகரெட் மீது செலவழிக்கும் ஒவ்வொரு 12 ரூபாவிற்குமே 1 ரூபாவினை இழக்கின்றது. 

இது ஏன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது? 

சிகரெட் வரியினை குறைத்து அறவிடுவதன் உடனடி விளைவு யாதெனில் வருமான இழப்பு. சிகரெட்டின் நுகர்வு 2025 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல் 2026 ஆம் ஆண்டிலும் இருந்தால், வரி விகிதத்தினை 2026 இல் 75% அறவிட்டால் - சில்லறை விலையில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாமல் - அரசாங்கம் மேலதிகமாக 17.3 பில்லியன் ரூபாவினால் வருடாந்த வருமானத்தினை அதிகரிக்கலாம். இது வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின்படி, அண்ணளவாக அனர்த்த முகாமைத்துவத்தின் 1.2 மடங்கும், ஊட்டச்சத்து ஒதுக்கீட்டின் 1.3 மடங்குமாகும். 

இவை இரண்டிற்குமே மேலதிகமாக நிதி தேவைப்படுகிறது. இன்னும் என்ன, அரசாங்கம் சிகரெட்டின் மீது சரியாக வரி வசூலிக்குமாயின், மற்றைய வரிகளை இலகுவாக குறைக்க முடியும். பக்கம் 32,003 நவம்பரில் உலக சுகாதார தாபனத்தின் (WHO) புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு மகாநாட்டில் இலங்கை புகையிலை வரிவிதிப்பு சம்பந்தமாக சர்வதேச வாக்குறுதியினை உறுதிப்படுத்தி உள்ளது. 

இம்மாநாட்டின் உள்ளடக்கம் 6 இன் அமுல்படுத்தும் வழிகாட்டலின்படி, ஒழுங்கான புகையிலை வரி அதிகரிப்பு பணவீக்கத்தினை எதிர்கொள்வதற்கும் வருமான அதிகரிப்பினை கொண்டு வருவதற்கும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையின் தற்போதைய அணுகுமுறை எதிர்த்திசையை நோக்கி செல்கிறது. 

அடுத்து என்ன? 

இக்கொள்கையை சரி செய்வது இலகுவானது. ஏனெனில் சிகரெட் வரி அடிப்படையில் கலால் வரி மூலம் அறவிடப்படுகிறது. கலால் வரியினை அதிகரிப்பதன் மூலம் இதனை மீட்டெடுக்க முடியும். இதற்கு சட்டம் இயற்றத் தேவையில்லை, பாராளுமன்ற அனுமதியும் தேவையில்லை. 

இந்த மாற்றம் முற்றுமுழுதாக நிதி அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்டது. தற்பொழுது ஜனாதிபதி, ஒரு அரசாணை இதழ் (gazette) அறிவிப்பின் ஊடாக ஒரே நாளில் மாற்ற முடியும். 

எங்களின் சிறந்த ஆய்வுகளின்படி, சிகரெட்டின் விலையின் 75% ஆக வரியினை உயர்த்துவது ஒரு முரண்பாட்டினை சரி செய்தல் மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் இது அரச வருமானத்தினை 17.3 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க வழிவகுக்கும். 

இத்துடன், காலப்போக்கில் சிகரெட்டின் விலையினை அதன் உற்பத்தியாளர்கள் அதிகரித்தால் இதன் மூலம் நாட்டிற்கு மேலதிகமாக வருமானம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. 

வேறென்ன, மேலதிக வருமானத்தினை சமூக மேம்படுத்தலுக்கோ அல்லது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வரிகளை குறைக்கவோ பயன்படுத்தலாம். 

ஆய்வு - நிஷான் டி மெல் மற்றும் ராஜ் ராஜகுலேந்திரன்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278