Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
கொமர்ஷல் வங்கி தற்போது வாடிக்கையாளர்களுக்காக PayPal உடன் இணைந்த பணம் மீளப்பெறும் வசதியை அறிமுகப்படுத்துகிறது

Jun 8, 2026 - 02:53 PM

கொமர்ஷல் வங்கி தற்போது வாடிக்கையாளர்களுக்காக PayPal உடன் இணைந்த பணம் மீளப்பெறும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
Mobitel Inner 1278

கொமர்ஷல் வங்கியானது இலங்கைக்கு சமீபத்திய உலகளாவிய நிதி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தனது முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தகுதியான வாடிக்கையாளர்கள் தமது உலகளாவிய டிஜிட்டல் வருமானங்களை ComBank Digital மூலம் நேரடியாக தமது கொமர்ஷல் வங்கி கணக்குகளுக்கு எளிதாக மாற்றிக் கொள்ள PayPal இணைக்கப்பட்ட பணம் மீளப்பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

PayPal மற்றும் ComBank Digital இன் ஒருங்கிணைப்பு மூலம், இலங்கை தன்முனைப்பாளர்கள், டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது PayPal இருப்புத் தொகைகளை வங்கியின் ComBank Digital தளத்தின் மூலம் உடனடியாகவும், பாதுகாப்பாகவும், முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி ஊடகம் வழியாகவும் உள்நாட்டு கொமர்ஷல் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றிக் கொள்ள முடியும். உலகின் முன்னணி இணையதள கொடுப்பனவுத் தளங்களில் ஒன்றாக சுமார் 200 சந்தைகளில் செயல்படும் PayPal, தனிநபர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. இதனால், சர்வதேச டிஜிட்டல் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒருங்கிணைப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது. 

இந்த ஒருங்கிணைப்பு ComBank Digital தளத்தில் உட்பொதிக்கப்பட்ட பாதுகாப்பான, சுயசேவை மின்னஞ்சல் அடிப்படையிலான ஒத்திசைவு முறையின் மூலம் செயற்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது. இணைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதும், பணம் பெற தகுதியான வாடிக்கையாளர்களின் PayPal இருப்புத் தொகைகளை வங்கி செயலியின் மூலம் பார்வையிட்டு, அவற்றை நேரடியாக தமது கொமர்ஷல் வங்கி கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த முழு செயல்முறையும் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுவதுடன், கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி சுமார் இரண்டு நிமிடங்களில் நிறைவேற்றப்படலாம். 

இந்த புதிய முன்னேற்றம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவிக்கையில், இது இலங்கையின் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்துடனான இணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாகும். பல ஆண்டுகளாக, உலகளாவிய டிஜிட்டல் தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் இலங்கை தன்முனைப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவோர், அந்த வருமானங்களை பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி ஊடகங்கள் வழியாக நாட்டிற்குள் கொண்டு வருவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். ComBank Digital மூலம் PayPal ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதன் மூலம், சர்வதேச வருமானங்கள் நாட்டின் உத்தியோகபூர்வ நிதி முறைமைக்குள் தடையின்றி பாய்ச்சப்படுவதற்கு நாம் வழிவகுக்கிறோம். அதேவேளை, வெளிநாட்டு நாணய வரவுகளை ஊக்குவித்தல், நிதி வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஊழியர்கள் உலக சந்தையில் மேலும் சுறுசுறுப்பாக பங்கேற்க உதவுதல் போன்ற பரந்த தேசிய பொருளாதார இலக்குகளுக்கும் இந்த முயற்சி ஆதரவளிக்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தன்முனைப்புப் பொருளாதாரத்துக்கு ஆதரவு வழங்கும் தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏற்கனவே தனிப்பட்ட தன்முனைப்பாளர்களுக்கான கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இலங்கையின் டிஜிட்டல் ஊழியர்களின் மாற்றமடைந்து வரும் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு வங்கி தீர்வுகளை வழங்குகின்றன. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278