Nov 10, 2026 - 02:53 PM

இலங்கையின் 30 வருட கால நீர் வழங்கல் முன்னோடிக்கு, நீர் அணுகல், பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத் திட்டத்திற்கு ஆசியாவின் உயர் கௌரவிப்பு கிடைத்துள்ளது.
இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் துறையில் 30 ஆண்டுகளாக முன்னோடியாகவும் சந்தை முன்னணியாளராகவும் திகழும் American Premium Water, தனது நிலைபேறுதன்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் இலக்கு சார்ந்த தொடர்பாடலுக்காக பிராந்திய ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற Dragons of Asia விருதுகள் வழங்கும் விழாவில், நிறுவனத்தின் உலக நீர் தினப் பிரச்சாரமான Fill Her Glass, காரணம், சுற்றுச்சூழல் அல்லது நிலைபேறுதன்மை பிரிவில் Gold Dragon விருதையும், குறைந்த செலவுத் திட்டம் பிரிவில் Black Dragon விருதையும் வென்றுள்ளது. மேலும், இப் பிரச்சாரமானது ஆசியாவின் சிறந்த திட்டத்தை அங்கீகரிக்கும் Red Dragon விருதுக்கான இறுதிக்கட்டப் போட்டியாளராகவும் பரிந்துரைக்கப்பட்டது.
நிலைபேறுதன்மை என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்போடு நின்றுவிடாமல், சமூக முன்னேற்றம், உள்ளடக்கல் மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்ற American Premium Water நிறுவனத்தின் திடமான நம்பிக்கையை இந்தச் சாதனை பிரதிபலிக்கின்றது. Fill Her Glass பிரச்சாரத்தின் மூலம், நீர் வசதிகள் வரையறுக்கப்பட்ட சமூகங்களில் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும், பெரும்பாலும் கவனிக்கப்படாத சவால்களையும், நீர் சேகரிக்கும் சுமை, அவர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் இந்நிறுவனம் வெளிக் கொண்டு வந்துள்ளது.
“She fills the world, but her glass is empty” எனும் ஆழமான சிந்தனை, இப் பிரச்சாரத்தின் மையப் பொருளாக அமைந்தது. இந்த வலுவான பார்வையானது, சுத்தமான குடிநீருக்கான நம்பகமான அணுகல் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்துகின்றது. இது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் தங்களது இலட்சியங்களைப் பின்தொடரவும், தங்களது எதிர்காலத்தைச் செதுக்கிக் கொள்ளவும் தேவையான அதிக நேரம், சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய காரணியாகவும் அமைகின்றது.
இந்தக் கௌரவிப்பு தொடர்பில் American Premium Water பிரதம நிறைவேற்று அதிகாரி பயாஸ் பசால் கருத்துத் தெரிவிக்கையில்,:
“இலங்கையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து, கடந்த 30 ஆண்டுகளாக இத்துறையை முன்னின்று வழிநடத்தி வந்துள்ள நாம், தரமான குடிநீருக்கான அணுகலை வழங்குவதற்கும் அப்பால் எமது பொறுப்பு நீள்கின்றது என்பதை உணர்ந்துள்ளோம். நிலைபேறுதன்மை என்பது மனிதர்கள், சமூகங்கள் மற்றும் வாய்ப்புகள் மீது நீர் ஏற்படுத்தும் பரந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வதையும் குறிக்கின்றது. Fill Her Glass பிரச்சாரத்தின் ஊடாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மீது வெளிச்சம் பாய்ச்சவும், நீர் அணுகல் மற்றும் சமத்துவம் குறித்து மேலும் அர்த்தமுள்ள உரையாடலை ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்பினோம். இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரம் ஆசிய மேடையில் அங்கீகரிக்கப்படுவதைக் காண்பதில் நாம் பெருமிதமடைகின்றோம். முக்கியத்துவம் வாய்ந்த காரணங்களுக்காக எமது வர்த்தக நாமத்தையும், தளத்தையும் பயன்படுத்துவதற்கும், மேலும் நிலைபேறான மற்றும் சமத்துவமான எதிர்காலத்திற்குப் பங்களிப்பதற்குமான எமது அர்ப்பணிப்பை இது மேலும் உறுதிப்படுத்துகின்றது.”
Dragons of Asia விருதானது, American Premium Water நிறுவனத்தின் சமீபத்திய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முயற்சிகளுக்குக் கிடைத்த தொடர்ச்சியான பெருமைமிக்க அங்கீகாரங்களை மேலும் சிறப்படையச் செய்துள்ளது. Dragons of Sri Lanka விருது விழாவில், இந்நிறுவனம் மூன்று Gold Dragons மற்றும் ஒரு Black Dragon உட்பட நான்கு விருதுகளைத் தனதாக்கிக் கொண்டது. மேலும், SLIM Digis 2.6 விருது விழாவில் Cross Media Integration பிரிவிலும் இந்நிறுவனம் வெற்றியீட்டியுள்ளது.
Fill Her Glass பிரச்சாரத்தின் வெற்றியானது, American Premium Water மற்றும் அதன் தொடர்பாடல் பங்காளரான Shift Solutions ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கின்றது. Shift Solutions நிறுவனத்தின் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் மூலோபாயக் கூட்டாண்மை என்பன இப் பிரச்சாரத்திற்கு புத்துயிர் அளிக்கத் துணைபுரிந்தன. ஒன்றிணைந்து எட்டப்பட்டுள்ள இந்த அங்கீகாரங்களானவை, ஆக்கப்பூர்வமான சிந்தனை, மூலோபாயத் தொடர்பாடல் மற்றும் இலக்கு சார்ந்த நோக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் தனது வர்த்தக நாமத்தை வலுப்படுத்துவதோடு, முக்கியமான சமூக மற்றும் நிலைபேறுதன்மைப் பிரச்சினைகளைப் பொது விவாதத்திற்கு கொண்டு வருவதிலும் American Premium Water நிறுவனம் காட்டி வரும் முக்கிய கவனத்தை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் போத்தல் அடைக்கப்பட்ட குடிநீர் துறையில் ஒரு முன்னோடியாக, American Premium Water நிறுவனமானது, அத்தியாவசிய வளங்களுக்கான அணுகல், சமூக நல்வாழ்வு மற்றும் மேலும் சமத்துவமான எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை உணர்ந்து, நிலைபேறுதன்மை குறித்த பரந்த புரிதலைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

































