Nov 3, 2026 - 03:49 PM

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டுக் கருத்திட்டடத்தை அமுல்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 10 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த நிதிக்கொடை ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கையொப்பமிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பசுமை நிலைமாற்று தொடக்க முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு தாங்குதிறன் கொண்ட வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான நிறுவன இயலளவுகளை அதிகரித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளை அணுகுவதற்குத் தேவையான சர்வதேச தரநிர்ணயங்களுக்கு இணங்கியொழுகுவதை மேம்படுத்துவதற்காக இலங்கை எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குதல் போன்ற நோக்கங்களை அடைவதே இக்கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சால் 04 ஆண்டுகளில் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
































