Nov 9, 2026 - 04:44 PM

பாரம்பரிய தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்பதிலிருந்து, முன்னணித் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனமாக மாற்றம் பெறும் SLT-MOBITEL இன் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, Versa Networks தொழில்நுட்பத்தில் இயங்கும் அடுத்த தலைமுறை 'SASE 361' - Secure Access Service Edge சேவையை SLT‑MOBITEL Enterprise உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 'SASE 361 அறிமுக நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நிறுவனசார் தலைவர்கள், தொழில்னுட்ப நிபுணர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் என cloud அடிப்படையிலான வலையமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வமுள்ள பலரும் கலந்து கொண்டனர். நிறுவனசார் தகவல் தொழில்னுட்பத்தை மீள அறிமுகப்படுத்துவதில் SASE 361 இன் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும், நிறுவனங்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான, செம்மையான மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்பதையும் பார்வையிடுவதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது.
இலங்கையின் நம்பகமான டிஜிட்டல் செயற்படுத்துனர் எனும் SLT-MOBITEL இன் பங்களிப்பை இச்சேவை மேலும் உறுதிப்படுத்துவதுடன், நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் மாற்றத்தை பாதுகாப்பாகவும், திறம்படவும், நம்பிக்கையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் உலகளாவிய நிபுணத்துவத்தை உள்ளூர் சேவை விநியோகத்துடன் ஒருங்கிணைக்கின்றது.
SASE 361 இன் இந்த உத்தியோகபூர்வ அறிமுகம், விரைவாக மாற்றமடைந்து வரும் டிஜிட்டல் சூழலில் நிறுவனங்கள் எழுச்சிபெற்று சிறந்து விளங்குவதற்குத் தேவையான ஒரு மூலோபாயப் பாய்ச்சலை நிறுவுவதுடன், கண்டுபிடிப்பு, போட்டித்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வையுடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.
SASE என்பது வலையமைப்பு மற்றும் பாதுகாப்பை ஒரே சேவையாக ஒருங்கிணைக்கும் ஒரு Cloud-சார்ந்த கட்டமைப்பாகும். இது நிறுவனங்கள் தங்களது உட்கட்டமைப்பை எளிமையாக்கவும், தரவுகளைப் பாதுகாக்கவும், பயனர்கள், சாதனங்கள் மற்றும் இருப்பிடங்களுக்கான பாதுகாப்பான அணுகலை வழங்கவும் உதவுகின்றது. பாரம்பரிய, மையப்படுத்தப்பட்ட தரவு மைய பாதுகாப்பை மட்டுமே நம்பியிருப்பதற்குப் பதிலாக, வேலை நடைபெறும் இடத்திற்கு மிக அருகிலேயே, வலையமைப்பு எல்லையிலேயே SASE சேவை இணைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றது.
SASE 361 சேவை, வலையமைப்பு (Network), பாதுகாப்பு (Security) மற்றும் அணுகல் (Access) ஆகிய மூன்று முக்கிய தூண்கள், ஆறு ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைகள் (NGFW, SWG, CASB, ZTNA, DLP, ATP) மற்றும் ஒரே ஒருங்கிணைந்த இயங்குதளம் (Unified platform) எனும் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான டிஜிட்டல் மாற்றத்திற்கு எளிமைப்படுத்தப்பட்ட அதேவேளையில் விரிவான அணுகுமுறையை வழங்குகின்றது. நெட்வொர்க்கிங் மற்றும் பாதுகாப்பை ஒரு ஒருங்கிணைந்த, கிளவுட்-சார்ந்த தளத்தில் தடையின்றி இணைப்பதன் மூலம், டிஜிட்டல் யுகத்தில் நிறுவனங்கள் விறுவிறுப்பு, மீள்திறன் மற்றும் நம்பிக்கையை அடைவதற்கு SASE 361 வலுவூட்டுகின்றது.
இச் சேவை, பாதுகாப்பான இணைப்பு, cloud வழி அமையப்பெற்ற பாதுகாப்பு மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வலையமைப்பு முகாமைத்துவம் ஆகியவற்றை வழங்கி, இலங்கையில் நிறுவனங்களுக்கான வலையமைப்பு மற்றும் பாதுகாப்பிற்குப் புதிய வரைவிலக்கணத்தை அளிக்கின்றது. நிகழ்நேரக் கண்காணிப்பு, மேம்பட்ட அச்சுறுத்தல் பாதுகாப்பு மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன், பல செயல்பாடுகளை ஒரே இயங்குதளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், நிறுவனங்கள் தங்களது முக்கியமான தரவுகளைப் பாதுகாக்கவும், பரவலாகப் பணியாற்றும் ஊழியர்களின் செயல்திறனை உயர்த்தவும், சிக்கல்களைக் குறைக்கவும் SASE 361 வழிவகுக்கின்றது.
SASE துறையில் உலகளாவிய முன்னணியாளரான Versa Networks மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உள்ளூர் விநியோகப் பங்காளியான Connex Information Technologies ஆகியவற்றுடனான இந்த மூலோபாயக் பங்காண்மை, நம்பகமான உள்ளூர் நிபுணத்துவத்தின் ஆதரவுடன் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதற்கான SLT-MOBITEL Enterprise இன் திறனை மேலும் வலுப்படுத்துகின்றது. இப் பங்காண்மைகள் இணைந்து, இலங்கையின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, உலகளவில் நிரூபிக்கப்பட்ட முன்னணித் தொழில்நுட்பங்களை இலங்கையின் பெருநிறுவனங்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றன.
































