Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

    Mobitel Inner 1278

    ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த மெகா ஏலத்தில் தலா 14.2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரில் ஒருவரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம் ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் மீது அபார நம்பிக்கை வைத்து சிஎஸ்கே நிர்வாகம் 14.2 கோடி ரூபாயை வாரி இறைத்தது.

    ஆனால் ஐபிஎல் 2026 தொடரில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. 6 போட்டிகளில் ஆடி 5 இன்னிங்ஸ்களில் வெறும் 90 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 43 ஓட்டங்களே அவரது அதிகபட்சமாகும். அதைவிட முக்கியமாக, இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவரால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.

    இதனால் இவ்வளவு பெரிய தொகையை அவருக்காக தொடர்ந்து வைத்திருப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது விக்கெட் கீப்பர் பேட்டர் கார்த்திக் சர்மா தனது திறமையை ஓரளவு நிரூபித்துள்ளார்.

    11 போட்டிகளில் ஆடிய அவர் 32.77 சராசரியுடன் 295 ஓட்டங்களை குவித்தார். லக்னோ அணிக்கு எதிராக 71 ஓட்டங்களை விளாசி அசத்தினார். மிடில் ஆர்டரில் அவர் காட்டிய முதிர்ச்சி காரணமாக அவரை அணி நிர்வாகம் தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது.

    டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக தங்களது கையிருப்புத் தொகையை உயர்த்த சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. தற்போது சிஎஸ்கேவிடம் வெறும் 2.4 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பு உள்ளது. சம்பள வரம்பு உயர்வுடன் சேர்த்தாலும் 7.4 கோடி ரூபாய்தான் கிடைக்கும்.

    எனவே, பிரசாந்த் வீரை விடுவித்து தனது பர்ஸ் மதிப்பை அதிகரித்துவிட்டு, ஏலத்தில் மீண்டும் குறைந்த விலைக்கு அவரை வாங்க சிஎஸ்கே வியூகம் வகுக்கலாம்.

    கடந்த சீசனில் மோசமாகச் செயல்பட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சனை விடுவிக்கப் போவதில்லை என்பதில் பஞ்சாப் கிங்ஸ் உறுதியாக உள்ளது.

    அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று, ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதால் ஜான்சனைத் தக்கவைக்க பஞ்சாப் முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் தக்கவைப்புப் பட்டியலை வெளியிட நவம்பர் 15 கடைசி நாளாகும். அதற்குள் இந்த மாற்றங்கள் நிகழக்கூடும்.