Oct 31, 2026 - 05:09 PM

கடவத்தை, மஹகட சந்தியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
இன்று (31) பிற்பகல் மஹகட சந்திப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி குறித்த முச்சக்கர வண்டி தொடர்ந்து செலுத்திச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியில் பயணித்த 16 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவனது முதுகுப் பகுதியில் இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
































