Oct 31, 2026 - 10:42 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3-ம் திகதி ஒரு படகுடன் கைதான 9 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான், படகின் ஓட்டுநரான மீனவருக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், படகில் இருந்த ஏனைய 8 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
































