Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

    Mobitel Inner 1278

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு, கீரன் பொல்லார்ட் தலைமை பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் புதிய பேட்டிங், பவுலிங் பயிற்றுவிப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு OG ஐபிஎல் அணிகளுக்கும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. ஒருபக்கம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு எங்கப்பா சிஎஸ்கேவை காணோம் என்ற விதத்தில் தான் சூப்பர் கிங்ஸ் இருந்துவருகிறது.


    மறுபக்கம் கடப்பாரை அணி என பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்துவருகிறது. கடைசியாக 2020 இல் கிண்ணத்தை வென்ற அந்த அணி படுமோசமான ஐபிஎல் சீசன்களையே கடந்து வந்துள்ளது.


    2020 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றபிறகு ஒரு ஐபிஎல்லில் கூட இறுதிப்போட்டிவரை வராத நிலையில், மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளர்கள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. மஹேலா ஜெயவர்த்தன, லசித் மலிங்க போன்ற பெரிய பெயர்களும் பயிற்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.


    மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் மும்பை ஜாம்பவான் கீரன் பொல்லார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு கீழ் இருக்கும் பயிற்றுவிப்பாளர்கள் பட்டியலை இன்று (30) மும்பை அணி வெளியிட்டுள்ளது.


    இன்றைய அறிவிப்பின் படி, வரவிருக்கும் 2027 ஐபிஎல் தொடருக்காக, ராபின் உத்தப்பாவை பேட்டிங் பயிற்றுவிப்பாளராகவும், மிட்செல் மெக்கலெனகனை பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், டி. திலீப்பை ஃபீல்டிங் பயிற்றுவிப்பாளராகவும், தவால் குல்கர்னியை பந்துவீச்சு மேம்பாட்டு பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிவித்தது.


    அதிரடிக்கு பெயர் போன ராபின் உத்தப்பா கேகேஆர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் கிண்ணங்களை வென்றுள்ளார். கேகேஆர் கிண்ணத்தை வென்ற 2014 சீசனில் 660 ஓட்டங்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    அதேபோல மிட்செல் மெக்கலெனகன் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சு ஜாம்பவான் ஆவார். அவர் மும்பை அணிக்காக 4 கிண்ணங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல குல்கர்னி மும்பையை பிறப்பிடமாக கொண்ட குல்கர்னி, மும்பை தயாரித்த சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராவார். அவருக்கு ஹோம் கிரவுண்ட்டின் சாதகம், பாதகங்கள் அத்துப்படி என்பதால் அவரை சிறப்பு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். அவர் மும்பைக்காக 2 ஐபிஎல் கிண்ணங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.