Oct 30, 2026 - 01:55 PM

HUTCH மற்றும் Browns EV இணைந்து புதிய கூட்டாண்மையை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், HUTCH Cheer Points வாடிக்கையாளர் Loyalty திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கும், ChargeUP வலையமைப்பில் மின்னேற்றம் செய்வதற்கும் பிரத்தியேக விலைக்கழிவுகளை வழங்கும் இலங்கையின் முதலாவது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர்கள் தமது Loyalty Cheer Points களைப் பயன்படுத்தி Wuling Cloud, Wuling Binguo, BAW E7 மற்றும் BAW E7 Pro உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மின்சார வாகன மாதிரிகளில் பிரத்தியேக விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம், மேலும் Silver முதல் Diamond வரையிலான உறுப்பினர் நிலைகளின் அடிப்படையில் சேமிப்புகளைப் பெறலாம். Brown & Company PLC நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான Browns EV, இலங்கையில் Wuling மற்றும் BAW மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக திகழ்கிறது.
நிலையான போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள மின்னேற்றும் [ChargeUP] நிலையங்களில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யும் போது, வாகன உரிமையாளர்களுக்கு பணத்தை மீளப் பெறும் சலுகைகளை வழங்குவதற்காக Hutch, ChargeUP நிறுவனத்துடனும் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொதுவான மின்சார வாகன மின்னேற்றும் வலையமைப்பானது அனைத்து மின்சார வாகன வர்த்தக நாமங்களையும் ஆதரிப்பதுடன், ChargeUP மொபைல் செயலி மூலம் வசதியான அணுகலையும் வழங்குகிறது. இந்தக் கூட்டாண்மை, வேகமாக வளர்ந்து வரும் HUTCH Cheer Points வாடிக்கையாளர் Loyalty திட்டத்தின் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளைத் தாண்டி, வாகன மற்றும் போக்குவரத்துத் துறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கான வெகுமதிகள் மற்றும் சிறப்புச் சலுகைகளை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
Browns EV நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் பவித்ரா ஜயசேகர தெரிவிக்கையில் , “HUTCH உடனான இந்தக் கூட்டாண்மை, இலங்கையின் பரந்துபட்ட வாடிக்கையாளர் பிரிவினருக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு முற்போக்கான முன்னெடுப்பாகும். வாடிக்கையாளர் Loyalty மூலம் கிடைக்கும் பலன்களை மின்சார வாகனங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பயனளிப்பதுடன் அர்த்தமுள்ள மதிப்பையும் உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.” என்றார்.
Hutch ஸ்ரீலங்காவின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான ஹம்தி ஹஸன் தெரிவிக்கையில்'' ,
“நிலைத்தன்மை என்பது எமது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பெறுமதியின் மூலம் நாம் ஆதரிக்கும் ஒரு விடயமாகும்; அதை மக்களின் அன்றாடச் செயல்களில் ஒருங்கிணைக்கிறோம். வாடிக்கையாளர்கள் தமது Cheer Pointsகளை மின்சார வாகன விலைக்கழிவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்துக்கான இலங்கை குடும்பங்களின் முக்கியமான முன்னேற்றத்திற்கு நாம் ஆதரவளிக்கிறோம். இதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு சேமிப்பை ஏற்படுத்துவதோடு, மேலும் பசுமையான இலங்கையையும் உருவாக்குகிறோம்.”
இந்த மூலோபாய நடவடிக்கை, Hutch நிறுவனத்தின் மூல நிறுவனமான CK Hutchison Holdings-இன் விரிவான நிலைத்தன்மை உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகள் முழுவதும் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் குறைந்த கார்பன் வணிக நடைமுறைகளை ஆதரிக்கிறது. தனது நிலைத்தன்மை முயற்சிகளின் மூலம், CK Hutchison காலநிலை நடவடிக்கை, கார்பன் நீக்கம் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில்,பிரவுண்ஸ் மற்றும் ChargeUP நிறுவனங்களுடனான தனித்துவமான கூட்டாண்மைகள் மூலம் Hutch இந்த உறுதிப்பாட்டை நாட்டிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது; இதன் மூலம் மின்சார வாகன உரிமை மற்றும் மின்னேற்றம் செய்தல் என்பவற்றை மேலும் பயனுள்ளதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுகின்றது.

































