Oct 30, 2026 - 11:03 AM

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 06 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் மற்றும் சூர்யா, நஸ்லென் கதாபாத்திர வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லென் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வு சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அடுத்த நிகழ்வு நடைபெறவுள்ளது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 31 ஆம் திகதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிரவுள்ளனர். குறிப்பாக சூர்யாவின் பேச்சு ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

































