Oct 28, 2026 - 06:05 PM

செலிங்கோ லைஃப் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவினர், அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நான்கு நாள் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர். நிறுவனத்தினால் இப்பயிற்சித் திட்டமானது முகவர் வலையமைப்பு முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதையும், கிளைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடைமுறை உத்திகளை விற்பனைத் தலைவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னேறிச் சென்று கட்டியெழுப்புங்கள் (Lead Forward> Build) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சித் திட்டத்தில், காப்புறுதித் துறையினருக்கான டிஜிட்டல் தொடர்பாடல் முறைகள், செயல்திறன் முகாமைத்துவம், தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்த்தல், விற்பனை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான அலுவலகச் சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் Great Eastern Life Insurance நிறுவனத்தின் அனுபவமிக்க ஐந்து குழு விற்பனை முகாமையாளர்கள் இப்பயிற்சித் திட்டத்தை வழிநடத்தினர். காப்புறுதித்துறையில் நீண்டகால அனுபவமுடைய திரு. கே. ஹரிதாஸ் தலைமையில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அறிவுப் பகிர்வுடன் நடைமுறைப் பயிற்சிகளும் இணைக்கப்பட்ட இத்திட்டத்தில், கிளை முகாமைத்துவத்தில் எதிர்கொள்ளப்படும் உண்மையான சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்தல், பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களையும் அவற்றின் தாக்கங்களையும் கண்டறிதல், சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், சமூக ஊடகத் தளங்களுக்கான காணொளிகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிளையிலும் காணப்படும் குறிப்பிட்ட சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் முகவர் நிலைய வலையமைப்பு முகாமைத்துவச் செயல்திட்ட வரைபடங்களை தயாரித்தல் போன்ற நடைமுறை அனுபவங்களையும் பங்கேற்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.முகவர் வலையமைப்பின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், கிளை முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை உயர்த்துதல் ஆகியவற்றுக்கான பெறுமதிமிக்க அறிவையும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய உத்திகளையும் வழங்குவதாக இப்பயிற்சித் திட்டம் அமைந்தது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சார்பில் ஒரு வலய முகாமையாளர், நான்கு பிராந்திய விற்பனை முகாமையாளர்கள், இரு முகவர் பிரிவுத் தலைவர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைமை அலுவலகப் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
செலிங்கோ லைஃப் குழுவினர், திரு. கே. ஹரிதாஸ் மற்றும் Great Eastern Life Insurance நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் படத்தில் காணப்படுகின்றனர்.
































