Oct 23, 2026 - 08:06 PM

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக வெளியிடப்பட்ட மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (24) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, தெரணியாகலை, ருவான்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் (Level 2) கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, பசறை, ஹாலிஎல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் (Level 1) கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை மற்றும் மதுகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் யடினுவர, உடுனுவர, உடுதும்பர , தெல்தோட்டை, தொலுவ, மினிப்பே, உடபலாத்த, குண்டசாலை மற்றும் மெததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அதே கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, யடியந்தோட்டை, வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, இப்பாகமுவ, ரிதீகம மற்றும் கணேவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மொணராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை, கொலொன்ன, பலாங்கொடை, கொடகவெல, கஹவத்தை, ஓபநாயக்க மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
































