Oct 23, 2026 - 02:26 PM

Mark and Comm (Pvt) Ltd மற்றும் Ethera Business LLC ஆகியன மூலோபாய கைகோர்ப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன. Mark and Comm நிறுவனத்தின் மூலோபாயத் தொடர்பாடல் நிபுணத்துவத்தையும், Ethera நிறுவனத்தின் எல்லை கடந்த சர்வதேச ஆலோசனைத் திறன்களையும், மாலைதீவு சந்தை குறித்த ஆழ்ந்த அறிவையும் ஒன்றிணைப்பதாக இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது. இது நிறுவனங்களுக்கான சந்தை நிலைப்படுத்தல், பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் சந்தைப் பிரவேசத்திற்கான தொடர்பாடல்கள் ஆகியவற்றுக்குத் தேவையான ஆதரவுகளை வழங்கவுள்ளது.
Ethera Business என்பது ஐக்கிய அரபு அமீரகம் - இலங்கை - மாலைதீவு ஆகிய பிராந்தியங்களை இணைக்கும் வர்த்தகப் பாதையை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு விசேட எல்லை கடந்த சர்வதேச ஆலோசனை நிறுவனமாகும். இது புதிய சந்தைப் பிரவேசம், கூட்டாண்மை மற்றும் முதலீட்டுக் கட்டமைப்புகள் மற்றும் எல்லை கடந்த பங்காண்மைகள் தொடர்பாகப் கூட்டாண்மை நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. Ethera Business, அதன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும், மாலைதீவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான ரங்க குணவர்தன தலைமையில் வழிநடத்தப்படுகின்றது. அவரது இராஜதந்திர மற்றும் வர்த்தக அனுபவம், பிராந்தியத்தின் நிறுவனங்கள், வர்த்தகச் சூழல் மற்றும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த நிறுவனத்தின் புரிதலை மேலும் வலுப்படுத்துகின்றது.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் Mark and Comm, மூலோபாயத் தொடர்பாடல் திட்டமிடல், விழிப்புணர்வுப் பிரசார மேம்பாடு, செய்தி உருவாக்கங்கள், ஆக்கப்பூர்வ வழிகாட்டல், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஊடகத் தொடர்புகள் ஆகியவற்றைப் பங்களிப்பாக வழங்கவுள்ளது. அதேவேளை, Ethera நிறுவனம், எல்லை கடந்த சர்வதேச ஆலோசனை, சந்தை நுண்ணறிவு, நிறுவன மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் மாலைதீவில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வழங்கவுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவில் பொறுப்பேற்கப்படும் திட்டங்களுக்கு, நடைமுறையிலுள்ள கொள்முதல் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு, Ethera Business LLC அல்லது மாலைதீவில் அதன் நியமிக்கப்பட்ட இணைவு நிறுவனம் முதன்மை விண்ணப்பதாரராகவும் பிரதான ஒப்பந்த நிறுவனமாகவும் செயற்படும்.
Mark and Comm Pvt Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் தன்சில் தாஜுதீன், ரங்க குணவர்தனவை ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று கொழும்பில் சந்தித்து, இப்பங்காண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையும் மாலைதீவும் கடல்சார் பாதைகள், சுற்றுலாத் துறை தொடர்புகள் மற்றும் மக்களிடையேயான நெருங்கிய உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், சேவைகள், விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய துறைகள் வணிக ரீதியான பங்காண்மைக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த துறைகளாகக் காணப்படுகின்றன. இத்துறைகளில் புதிய சந்தைப் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு, துறை சார்ந்த தேவைகள், உரிய அனுமதிகள் மற்றும் கொள்முதல் நிபந்தனைகள் குறித்துத் தெளிவான மதிப்பீடுகளை மேற்கொள்வது அவசியமாகும். துல்லியமான தொடர்பாடல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலான பங்குதாரர்களின் ஈடுபாடு ஆகியன நிறுவனங்கள் தங்களின் சேவைகளைத் தெளிவுபடுத்தவும், சந்தையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் பெரிதும் துணைபுரிகின்றன.
Mark and Comm நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, நிதியியல் சேவைகள், விருந்தோம்பல், விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), தொழிற்துறை, விவசாயம், அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளில் சேவையாற்றி வருகின்றது. GlobalCom PR Network இன் உறுப்பினராகவும், PRCA APAC அமைப்பின் கூட்டாண்மை அங்கத்தவராகவும் விளங்கும் இந்நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் Campaign Asia-Pacific Agency of the Year Awards நிகழ்வில், Rest of South Asia PR Agency of the Year பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Mark and Comm இன் முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “மாலைதீவு சந்தையைக் கருத்தில் கொள்ளும் வர்த்தக நாமங்கள், அச்சந்தையின் தன்மை குறித்துத் தெளிவுபடுத்தப்பட்ட மூலோபாயத்தையும், அதன் வர்த்தகச் சூழலை நன்கு புரிந்துகொண்ட பங்காளர்களையும் கொண்டிருப்பது அவசியமாகும். Ethera நிறுவனம், எல்லை கடந்த சர்வதேச ஆலோசனை நிபுணத்துவத்தையும், மாலைதீவு சந்தை குறித்த துல்லியமான புரிதலையும் கொண்டுவருகின்றது. அதேவேளை, நாம் மூலோபாயத் தொடர்பாடல், விழிப்புணர்வுப் பிரசார மேம்பாடு மற்றும் ஊடக நிபுணத்துவத்தை வழங்குகிறோம். இரு நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமக்கான வாய்ப்புகளை மதிப்பீடு செய்யவும், சந்தையில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவும், தொடர்புடைய பங்குதாரர்களுடன் திறம்படத் தொடர்பாடல்களை மேற்கொள்ளவும் உதவ முடியும்." என்றார்.
Ethera Business இன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரங்க குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “வணிக நிறுவனங்கள் எல்லை கடந்து விரிவடையும் போதும், புதிய சந்தைகளில் தமக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளும் போதும், அவற்றுக்கான உரிய வழிகாட்டல்களை வழங்குவதற்காக Ethera நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. எமது புதிய சந்தைப் பிரவேச ஆலோசனைகளையும் பிராந்திய அனுபவத்தையும், Mark and Comm நிறுவனத்தின் தொடர்பாடல் நிபுணத்துவத்துடன் ஒன்றிணைக்கும் வகையில் இப்பங்காண்மை அமைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு திட்டத்தின் தேவைக்கும் ஏற்ப ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவை வழங்க முடிகின்றது.” என்றார்.
மாலைதீவுகளுக்கு தமது வர்த்தக செயற்பாடுகளை விரிவாக்க எதிர்பார்க்கும் நிறுவனங்கள், reach@markandcomm.com அல்லது info@etherabusiness.com ஐ தொடர்பு கொள்ள முடியும்.

































