Oct 23, 2026 - 02:51 PM

அமானா வங்கி பிஎல்சி, தனது 15 வருட செயற்பாடுகள் பூர்த்தியை குறிக்கும் வகையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான மணி ஒலிக்கச் செய்யும் செயற்பாட்டை அண்மையில் முன்னெடுத்திருந்தது. முழுமையாக வட்டி-சாராத வங்கிப் பரிவர்த்தனைகளை முன்னெடுக்கும் இலங்கையின் ஒரே வங்கி எனும் தனது பிரத்தியேகமான பிரசன்னத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
2011 ஆம் ஆண்டில் தனது வங்கிச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த அமானா வங்கி பிஎல்சி, இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் திகழ்கின்றது. வங்கியின் பிரதான பங்குதாரராக ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB Group அமைந்துள்ளது. இந்த IsDB Group ஒரு Supra-National என்பதுடன், 'AAA' தரப்படுத்தப்பட்ட பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.
அமானா வங்கி தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், நாடு முழுவதிலும் தனது பிரசன்னத்தை உறுதியாக விரிவாக்கம் செய்துள்ளதுடன், தனது 80ற்கும் அதிகமான கிளை மற்றும் சுய-வங்கிச் சேவை நிலையங்களினூடாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர் இருப்பிற்கு சேவைகளை வழங்குவதுடன், சில்லறை, சிறிய, நடுத்தரளவு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட வங்கிச் செயற்பாடுகளையும், தெரிவு செய்யப்பட்ட வழிமுறையை கூட்டாண்மைகளுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது. வங்கியின் சொத்துக்களை பின்புலமாகக் கொண்ட வங்கியியல் மாதிரியினூடாக பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் மிக்க துறைகளுக்கு, தொழில்முயற்சியாளர்களுக்கு, வீட்டுத் தேவைகளிற்கு மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றை தனது பெறுமதிகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய உறுதிமொழி போன்றவற்றுடன் பொருந்தச் செய்து மேற்கொள்கின்றது.
நிகழ்வில் பிரதான உரையாற்றுகையில் அமானா வங்கி பிஎல்சியின் தவிசாளர் திரு. அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் 15 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் இந்த பரிவர்த்தனைகளை மணி ஒலித்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளதை பெரும் கௌரவமாகக் கருதுகிறோம். அபிவிருத்தியை மையமாகக் கொண்ட எமது தனித்துவமான, மக்கள் நட்பு வங்கிமுறை அணுகுமுறையின் மூலம் வளர்ச்சியினை சாத்தியமாக்கி, மனித வாழ்க்கையை வளப்படுத்தி, பெறுமதியை உருவாக்கி கடந்த 15 ஆண்டுகளில் வங்கி ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கத்திற்கு இச்சந்தர்ப்பம் ஒரு பொருத்தமான அங்கீகாரமாக அமைந்துள்ளது. இந்த முக்கியமான மைல்கல்லை நாம் கொண்டாடும் வேளையில், எமது வலுவான அடித்தளத்தை மேலும் விரிவுபடுத்தவும், எமது வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு அர்த்தமுள்ள வகையில் தொடர்ந்து பங்களிக்கவும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய வர்த்தக நேர ஆரம்ப நிகழ்வின் மூலம் அமானா வங்கியின் 15 ஆண்டுகால பயணத்தைக் கௌரவித்ததற்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய தினம் 15 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் ஒரு நாளாக மட்டுமன்றி, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிதி நிறுவனமாக அமானா வங்கி எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதைத் திரும்பிப் பார்ப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் எங்களது அடுத்த அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது, வங்கியினை மேலும் வலுப்படுத்துவது, எமது பங்குதாரர்களுக்கு நல்வாழ்வுத் தன்மையுடைய பெறுமதியை உருவாக்குவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது மற்றும் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட, மக்கள் நட்பு வங்கிமுறை எனும் எங்களது வாக்குறுதியைத் தொடர்ந்து நிறைவேற்றுவது ஆகியவற்றில் எங்களது கவனம் தொடர்ந்து இருக்கும்.” என்றார்.
அமானா வங்கியின் இந்த மைல்கல்லுக்கு வாழ்த்துத் தெரிவித்து கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம ஒழுங்குபடுத்தல் அதிகாரி நிலுபா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் முதலாவது 15 ஆண்டுகள் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னேற்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் ஆண்டுகளில் வங்கியானது தனது நேர்மறையான தாக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதைக் காண்பதற்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
கடந்த காலங்களில் அமானா வங்கி பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் வென்றுள்ளது. குறிப்பாக, வங்கியின் ஆரம்பக் கட்டத்தில் Global Finance Magazine USA சஞ்சிகையினால் “உலகின் மிகச்சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி” என கௌரவிக்கப்பட்டமை, The Asian Banker சஞ்சிகையினால் “உலகின் வலிமைமிக்க சிறந்த 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்று” எனத் தரப்படுத்தப்பட்டமை மற்றும் Islamic Development Bank Group இனால் “மிகவும் செல்வாக்குமிக்க ICD முதலீட்டு நிறுவனம்” எனத் தெரிவு செய்யப்பட்டமை ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.
கொழும்பு பங்குச் சந்தை, Sukuks உள்ளடங்கலாகப் பரந்த அளவிலான மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்கி வருகிறது. இதன்கீழ், இலங்கையின் முதலாவது பட்டியலிடப்பட்ட Sukuks பத்திரங்கள் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன அமானா வங்கி மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியவற்றின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்த இந்த நினைவு மணி ஒலித்தல் நிகழ்வானது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் வங்கியின் நீண்டகால இருப்பு மற்றும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

































