Oct 23, 2026 - 02:14 PM

உலக கால்பந்தின் உற்சாகத்தை இலங்கைக்குக் கொண்டுவந்த ரிட்ஸ்பரி ரொக்கோவா, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனது கால்பந்து ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்ட அசல் ஜெர்சிகளை அண்மையில் வழங்கியது.
ரிட்ஸ்பரி ரொக்கோவாவின் ‘Own Your GOAT’ விளம்பர ஊக்குவிப்பின் நிறைவைக் குறிக்கும் வகையில் இவ் விசேட நிகழ்வு அண்மையில் Havelock City Mall இல் நடைபெற்றது. இவ் ஊக்குவிப்பின் ஊடாக, இலங்கை கால்பந்து ரசிகர்களுக்கு லியோனல் மெஸ்ஸி கையொப்பமிட்ட FIFA 2026 ஆர்ஜென்டினா ஜெர்சியையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட FIFA 2026 போர்த்துக்கல் ஜெர்சியையும் வெல்வதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஊக்குவிப்பின் நிறைவைத் தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸி கையொப்பமிட்ட ஆர்ஜென்டினா ஜெர்சியின் வெற்றியாளராக ரமேஷ் கார்வால்ஹோ தெரிவுசெய்யப்பட்டதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட போர்த்துக்கல் ஜெர்சியின் வெற்றியாளராக பசிந்து அஞ்சன விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார். விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் இரு வெற்றியாளர்களுக்கும் அவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் வெற்றியையும், இந்த ஊக்குவிப்புத் திட்டம் முழுவதும் ரசிகர்களை ஒன்றிணைத்த கால்பந்து மீதான ஆர்வத்தையும் கொண்டாடும் தருணமாக அமைந்தது.
மெஸ்ஸி கையொப்பமிட்ட ஆர்ஜென்டினா ஜெர்சி, கால்பந்து ரசிகர்களுக்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அமைந்தது. இந்த ஊக்குவிப்பு ஆரம்பிக்கப்பட்டபோதே FIFA World Cup 2026 உடனான அதன் தொடர்பும், மெஸ்ஸி பங்கேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இறுதி உலகக் கிண்ணத் தொடரும் முக்கிய அம்சங்களாக முன்னிலைப்படுத்தப்பட்டு இந்த அரிய நினைவுச் சின்னத்தை வெல்லும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட அசல் போர்த்துக்கல் ஜெர்சியும், கால்பந்து வரலாற்றுடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கியமான நினைவுப் பொருளாக அமைந்ததுடன், ரசிகர்கள் கால்பந்து வரலாற்றில் இடம்பெறும் அரிய நினைவுகளைத் தம்வசம் கொண்டுசெல்லும் வாய்ப்பையும் பெற்றனர்..
CBL ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் - பொது முகாமையாளர், நிலுக்ஷ பஸ்டியன்ஸ் கருத்து தெரிவிக்கையில், “உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் விளையாட்டு ஏற்படுத்தும் அபாரமான ஆர்வத்தை ரிட்ஸ்பரி நன்கு புரிந்துகொண்டுள்ளது. போட்டியின் பரபரப்பைத் தாண்டி, விளையாட்டானது அதன் உயரிய நிலையை எட்டியவர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றின் ஊடாக ரசிகர்களுக்கு உத்வேகத்தை வழங்குகிறது. லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் அவ்வாறான இரண்டு முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ்வதுடன், கால்பந்து விளையாட்டில் அவர்களின் அபாரமான பயணத்தினாலும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினாலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளனர். FIFA World Cup 2026 உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இவ்விரு பிரபல கால்பந்து நட்சத்திரங்களின் கையொப்பமிடப்பட்ட ஜெர்சிகள் மூலம் கால்பந்து வரலாற்றின் ஒரு பகுதியாக விளங்கும் அரிய நினைவுச் சின்னங்களை தம்வசம் வைத்துக்கொள்ளும் வாய்ப்பை இரு அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஊக்குவிப்பின் ஊடாக விளையாட்டின் உணர்வையும் கால்பந்து உலகின் இரு முன்னணி நட்சத்திரங்களின் சிறப்புமிக்க பயணங்களையும் கொண்டாடுவதுடன், அந்த உற்சாகத்தை இலங்கை ரசிகர்களுடனும் பகிர்ந்துகொள்ள எதிர்பார்த்தோம்.” என்றார்.
இரு நட்சத்திரங்களின் கையொப்பமிடப்பட்ட ஜெர்சிகளுக்கு மேலதிகமாக, இந்த ஊக்குவிப்பின் கீழ் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 300 ஜெர்சிகளும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இதன் மூலம் மேலும் பல ரசிகர்கள் கால்பந்து மீதான தமது ஆர்வத்தைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றனர்.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் கையொப்பமிட்ட ஜெர்சிகள் வெற்றியாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் ஊடாக இலங்கை கால்பந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ரிட்ஸ்பரி ரொக்கோவாவின் இந்த ஊக்குவிப்புத் திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இத் திட்டம், உலகின் மிகப்பெரிய கால்பந்து அரங்கின் உற்சாகத்தையும், கால்பந்து வரலாற்றுடன் தொடர்புடைய அரிய நினைவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருந்தது.

































