Oct 23, 2026 - 01:51 PM

கோடைகாலம் மட்டுமின்றி தினமும் சாப்பிட வேண்டிய ஒரு அருமையான காய் வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் நிறைந்துள்ளதால், உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். உடலின் வெப்பநிலையை சீராக வைத்து, உள்ளுறுப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது.
சாலட், ஜூஸ், பச்சடி அல்லது அப்படியே பச்சையாகவும் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் தாராளமாக வெள்ளரிக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் கலோரிகள் மிக மிக குறைவு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ்..இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து (Fiber) செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
தொடர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் குறையும்..வெள்ளரிக்காய் சாறு சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் ஈரப்பதத்தையும் தருகிறது.
வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சியடைந்து, கருவளையங்கள் மறையும்..வைட்டமின் C நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இது பலப்படுத்துகிறது.

































