Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

    Mobitel Inner 1278

    தான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தந்ததாக நடிகர் நமோ நாராயணா கூறியுள்ளார்.


    ரஜினியின்  ‘ஜெயிலர் 2’ நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று (15) திரையரங்குகளில் வெளியானது.


    முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.


    இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது.


    இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    முதல் நாளில் 125 கோடி ரூபா வசூல் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 125.25 கோடி ரூபா வசூலித்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதில் இந்தியாவில் 70.25 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 55 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நமோ நாராயணா‘நாடோடிகள், ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமோ நாராயணா. தற்போது வெளியாகி உள்ள ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் காமெடியில் அசத்தி இருக்கிறார்.


    படத்தின் முதல்பாதியில் இவரது பங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பதோடு, அவருக்கு பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.அவர் அளித்த பேட்டியில்,


    “எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் பெரிதும் இல்லை. நான் வெளிநாட்டில் ஐடி தொழிலில் வேலை செய்து கொண்டிருந்தேன். சமுத்திரகனி மூலம் ‘நாடோடிகள்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு சசிகுமார் கூட சில படங்கள் நடித்தேன். ரஜினியுடன் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துள்ளேன்.


    டிரெய்லரில் அவரோடு என்னை பார்த்த பிறகு பலரும் சந்தோஷமா பேசுகின்றனர். எனக்கு நடிக்க வேண்டும் என்பதில் ஆசை இல்லை, என்றாலும் நான் நடித்த சில படங்கள் பேசப்பட்டது.


    ‘ஜெயிலர் 2’ படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள், நான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும், எப்படி பழக வேண்டும், எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை ரஜினி மூலம் தெரிந்து கொண்டேன். எத்தனை வெற்றி பெற்ற பிறகும் மனிதன் இயல்பாக இருக்கிறார். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்” என தெரிவித்தார்.