Oct 9, 2026 - 10:15 PM

சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
Rawalpindi,யில் இன்று (09) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைச் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக லஹிரு உதார 91 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவிச்சில், பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.


































