Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Oct 5, 2026 - 10:43 AM

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
Mobitel Inner 1278

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும், சாஞ்சிமலையிலிருந்து டிக்கோயா பகுதி நோக்கிப் பால் ஏற்றிச் சென்ற சிறிய ரக பிக்அப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் பிக்அப் ரக வாகனத்தின் சாரதி காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், பால் ஏற்றிச் சென்ற வாகனத்துக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து காரணமாக குறித்தப் பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது. 

அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278