Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
“பிளாக் கோல்டு” படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Oct 4, 2026 - 06:06 PM

“பிளாக் கோல்டு” படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
Mobitel Inner 1278

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. 

‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள வெற்​றி, கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘பிளாக் கோல்​டு’. 

ஆக்சன் திரில்​லர் படமான இதை தீரன் அருண்​கு​மார் எழுதி இயக்​கி​யுள்​ளார். பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், துளசி, பிக்​பாஸ் அபி​ராமி, ஏ.வெங்​கடேஷ், விஜய் டிவி ராமர்,சபிதா ராய்,ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். 

எம்​எம் ஸ்டூடியோஸ் சார்​பில் எம்​.மூர்த்தி வழங்​கும் இப்​படத்​துக்கு சந்​தோஷ்கு​மார் வீரா​சாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கவாஸ்​கர் அவி​னாஷ் இசை அமைத்​துள்​ளார். 

“ஓர் இளைஞனுக்​கும், நிழல் உலக வணிக மாபி​யாக்​களுக்​கும் இடையே நடை​பெறும் போராட்​டம் இப்​படத்​தின் கதை. நம் வாழ்​வில் சாதா​ரண​மாகக் கடந்து செல்​லும் ஒரு விஷ​யம், எப்​படி உலக அளவி​லான வணி​க​மாக மாறியது என்​ப​தைப் புது​மை​யான கதைக்​களத்​தில் சொல்​லும் படம் இது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. 

ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278