Oct 2, 2026 - 05:17 PM

கடவத்தை - மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (2) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.































