Sep 14, 2026 - 01:40 PM

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைக்குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
மேலும், இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவர்களின் 55 வயதான தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.





























