Header Logo
Vallibel FD
Selan Bank
இந்தியா
சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்

Sep 7, 2026 - 11:34 AM

சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்
Mobitel Inner 1278

தமிழக சட்டசபையில் பொலிஸார் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது, 

1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கினார். 

25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு 29 லட்சம் ரூபா தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. 

அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள். 

ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம். 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது. 

கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது. 

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது. 

முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? 

திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள். 

செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூபா 10 முதல் 100 ரூபா வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர். 

ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா?. 

திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். 

ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278