Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
ரோஹித் சர்மாவுக்கு குவியும் ஆதரவு!

Sep 4, 2026 - 05:28 PM

ரோஹித் சர்மாவுக்கு குவியும் ஆதரவு!
Mobitel Inner 1278

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து ஓட்டங்களை குவித்து வரும் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க நினைப்பது நியாயமற்றது என்றும், அவரது எதிர்காலத்தை அவரது துடுப்பாட்டம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அவருக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்த பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளப்பப்பட்டன. 

இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போதே அவர் ஓய்வு பெற சம்மதித்ததாக தகவல்கள் வெளியானது. கார்டிப் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு பின் இந்த வதந்திகள் பரவின. ஆனால், எதையும் கண்டு கொள்ளாத ரோஹித், தனது முழுக் கவனத்தையும் அடுத்த போட்டி மீது செலுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அபார சதம் விளாசி விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். முதல் 2 போட்டிகளிலுமே அவர் ஓய்வு பெறுவதற்கான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை. 

ஒரு வீரர் தொடர்ந்து ஓட்டங்களை குவித்து சிறப்பாக ஆடினால், அவரை அணியில் இருந்து நீக்க எவருக்கும் உரிமை இல்லை. தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட தவறினால் மட்டுமே மாற்று வீரரை யோசிக்க வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான விதி. 

எனவே அடுத்து நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தொடரில் ரோஹித் தனது ஆட்டத்திறன் அடிப்படையில் இடம்பெறுவது உறுதி. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பிற்கு இந்த உரிமை அவருக்கு உண்டு. அதன் பின் தனது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ரோஹித்திடமே உள்ளது. 

மற்ற வீரர்களுக்கு சலுகை காட்டிவிட்டு, ரோஹித் சர்மாவுக்கு மட்டும் ஒவ்வொரு தொடரிலும் ஓய்வு என்ற கத்தியை தொங்கவிடுவது அப்பட்டமான அநீதியாகும். சமூக வலைதள ட்ரோல்களோ அல்லது வதந்திகளை பரப்பும் ஊடகங்களோ அவரது விதியை தீர்மானிக்க முடியாது. 

மற்ற வீரர்களைப் போல ரோஹித்துக்கும் உரிய மரியாதையையும் சுதந்திரத்தையும் தர வேண்டும். வெளியே உள்ளவர்களின் வெட்டிப் பேச்சுகள் இன்றி, தனது பேட்டிங் மூலம் ரோஹித் தன் எதிர்காலத்தை சுயமாக தீர்மானிக்க வழிவிட வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அவருக்கு ஆதரவுக் குரல் கிளம்பி உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278