Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
22 தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு பிற்பகல் வரை அவகாசம்

Sep 3, 2026 - 08:16 AM

22  தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு பிற்பகல் வரை அவகாசம்
Mobitel Inner 1278

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்று (03) வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது. 

மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278