Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
யானைகள் ரயிலுடன் மோதுவதை தடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Sep 2, 2026 - 03:13 PM

யானைகள் ரயிலுடன் மோதுவதை தடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
Mobitel Inner 1278

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது. 

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச - தனியார் கூட்டுப் பங்களிப்புத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

3 Beam detection, Passive infrared ( PIR ), உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் மற்றும் 20 கிலோகிராமிற்கு மேற்பட்ட விலங்குகள் புகையிரதங்களில் மோதுவதை அடையாளம் காணல் மற்றும் அபாய எச்சரிக்கை (Temper alarm) கட்டமைப்பை இது கொண்டுள்ளது. 

புகையிரதப் பாதையின் இருபுறமும் பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள் (சிவப்பு/மஞ்சள்/பச்சை) மற்றும் புகையிரத இயந்திரப் பெட்டிக்குள் நிறுவப்படும் விசேட திரை மூலம் யானை இருக்கும் துல்லியமான இடம் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும். 

பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இந்த கட்டமைப்பின் மாதிரிச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயல்முறை, காட்டு யானை விபத்துகள் அதிகம் நடைபெறும் 13 இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக எதிர்வரும் மாதம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதுடன், அத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278