Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
‘ஸ்வராஜ் தலைமுறை’ திட்டம் மூலம் பெரும் போகத்திற்கு முன்னதாக SWARAJ வாடிக்கையாளர் சேவையை பலப்படுத்தும் DIMO Agribusinesses

Sep 2, 2026 - 02:00 PM

‘ஸ்வராஜ் தலைமுறை’ திட்டம் மூலம் பெரும் போகத்திற்கு முன்னதாக SWARAJ வாடிக்கையாளர் சேவையை பலப்படுத்தும் DIMO Agribusinesses
Mobitel Inner 1278

இலங்கையில் ‘SWARAJ’ (ஸ்வராஜ்) உழவு இயந்திரங்களுக்கான ஒரேயொரு உத்தியோபூர்வ விநியோகஸ்தரான DIMO Agribusinesses நிறுவனம், இவ்வாண்டிற்கான ‘ஸ்வராஜ் தலைமுறை’ (SWARAJ Parapura) திட்டத்தை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள SWARAJ உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவையும் மேம்பட்ட வாகன உரிமை அனுபவத்தையும் வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை நிறுவனம் இதன் மூலம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. ‘வாசல் தோறும் தொடரும் பிணைப்பு’ எனும் எண்ணக்கருவின் கீழ் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது, எதிர்வரும் பெரும் போக அறுவடை பருவத்திற்காக வாடிக்கையாளர்களையும் அவர்களின் உழவு இயந்திரங்களையும் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தியது. 

இவ்வாண்டின் ‘ஸ்வராஜ் தலைமுறை’ திட்டமானது ஜூலை மாதம் முழுவதும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. SWARAJ வாடிக்கையாளர்கள் வாழும் இலங்கை முழுவதிலும் உள்ள பகுதிகளை உள்ளடக்கி, நாடு முழுவதிலும் உள்ள SWARAJ உழவு இயந்திர உரிமையாளர்களை இச்சேவை சென்றடைந்தது. இத்திட்டத்தின் மூலம், DIMO Agri machinery சேவைப் பிரிவினர் நேரடியாக வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கே சென்று, விவசாய சமூகங்களுடனான உறவுகளைப் பலப்படுத்தியதுடன், விற்பனைக்குப் பிந்தைய அத்தியாவசிய ஆதரவையும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றினர். 

இந்த விஜயங்களின் போது, சேவைப் பிரிவினர் ஸ்வராஜ் உழவு இயந்திரங்களுக்கான இலவசப் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், தேவையான இடங்களில் சிறிய ரக பழுதுபார்ப்புகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளையும் இலவசமாக வழங்கினர். இது பெரும் போகத்திற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் தமது உழவு இயந்திரங்களை உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய உதவியது. அத்துடன், முக்கியமான விவசாய பருவங்களில் ஏற்படக் கூடிய வேலையற்ற நேரத்தை குறைக்கும் அதே வேளையில், உழவு இயந்திரத்தின் செயல்திறன், ஆயுட்காலம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை ரீதியான பராமரிப்பு வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் இதன்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஸ்வராஜ் மீது அவர்கள் தொடர்ச்சியாக வைத்துள்ள நம்பிக்கையை பாராட்டும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

இத்திட்டம், அசல் SWARAJ உதிரிப் பாகங்கள் கிடைக்கின்ற விதம் குறித்தும், DIMO Agri Machinery இன் விற்பனைக்குப் பிந்தைய மேம்படுத்தப்பட்ட சேவைகள் குறித்தும் உழவு இயந்திர உரிமையாளர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் ஆதரவையும் நேரடியாக விவசாய சமூகங்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலம், ஸ்வராஜ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவான மற்றும் நம்பகமான வாகன உரிமையாளர் பயணத்திற்காக, ‘ஸ்வராஜ் தலைமுறை’ திட்டம் தொடர்ச்சியாக பங்களிக்கிறது. 

இத்திட்டம் குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், ஸ்வராஜ் தலைமுறை என்பது வாடிக்கையாளர்களின் வாகன உரிமைக்கான பயணம் முழுவதிலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பெரும் போகத்திற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்றடைவதன் மூலம், சரியான நேரத்தில் தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும், உரிய பராமரிப்பு முறைகளை ஊக்குவிக்கவும், உண்மையான ஸ்வராஜ் உதிரிப் பாகங்கள் குறித்த அதிக விழிப்புணர்வை உருவாக்கவும் இத்திட்டம் எமக்கு உதவுகிறது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்த முயற்சியைத் தொடர்வதானது, நாடு முழுவதிலும் உள்ள விவசாய சமூகங்களுடன் நாம் கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. என்றார். 

‘ஸ்வராஜ் தலைமுறை’ மற்றும் தமது விற்பனைக்குப் பிந்தைய ஆதரவைப் பலப்படுத்துவதில் உள்ள தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றின் மூலம், விளைச்சலை அதிகரிக்கவும் நாட்டின் விவசாயச் சமூகத்தை வலுவூட்டுவதிலும் நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதில் DIMO Agribusinesses நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278