Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
Bill செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த'' பார் நிர்வாகம்!

Sep 2, 2026 - 01:00 PM

Bill செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த'' பார் நிர்வாகம்!
Mobitel Inner 1278

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நியூயார்க் போஸ்ட் பத்திரிகை அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 25 ஆம் திகதி 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. 

அவர் அங்கு உண்டு, குடித்து, சுமார் 60,000 தாய் பாட் ($1,800 அமெரிக்க டொலர்) என்ற பெரிய தொகையை பில்லாகச் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் பொலிஸார் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் அந்த இளம் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர். 

செலுத்தப்படாத கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். 

பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சமூக வலைதளங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு பதிலாக இந்த தண்டனையின் மூலம் அவர் எளிதில் தப்பித்து விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278