Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த DFCC Pragathi (பிரகதி) திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

Sep 1, 2026 - 11:17 AM

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த DFCC Pragathi (பிரகதி) திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
Mobitel Inner 1278

இலங்கையின் பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றன. வேலைவாய்ப்பை உருவாக்குதல், உள்ளூர் தொழில்துறைகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. இத்தகைய வணிகங்களின் வளர்ச்சிப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த ஆதரவை வழங்கும் நோக்கில், DFCC Pragathi எனும் ஒருங்கிணைந்த திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் சிறப்பு நிதித் தீர்வுகள், வணிக ஆலோசனைச் சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. இதன் மூலம், தொழில்முயற்சியாளர்கள் தங்கள் வணிகங்களைத் தொடங்கவும், வளர்க்கவும் மற்றும் விரிவுபடுத்தவும் தேவையான ஆதரவை எளிதாகப் பெற முடிகிறது. 

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்ந்த துறையில் சேவை செய்வதில் கொண்ட ஏறக்குறைய ஒரு தசாப்த கால அனுபவத்தின் அடிப்படையில், 2016-இல் தொடங்கப்பட்ட வங்கியின் பிரத்தியேக சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வணிகப் பிரிவின் அடுத்தகட்ட வளர்ச்சியாக DFCC Pragathi அமைகிறது. அப்போதிருந்து, DFCC வங்கி இலங்கை முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. விவசாயம், பால் பண்ணை, உற்பத்தி மற்றும் தேயிலை, கறுவா, மிளகு, வாழை, மஞ்சள், இஞ்சி மற்றும் நெற்செய்கை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வணிகங்களுக்கு வங்கி ஆதரவளித்து வருகிறது. பாரம்பரிய கடன் வழங்குதலுக்கு அப்பாற்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள DFCC Pragathi திட்டம், நிதி மற்றும் நிதி சாரா ஆதரவின் ஒருங்கிணைந்த சூழலமைப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம், தனிப்பயனாக்கப்பட்ட கடன் தீர்வுகள், மதிப்புச் சங்கிலி கடன் வழங்கல், நிதி அறிவு மேம்பாட்டுத் திட்டங்கள், வணிக ஆலோசனைச் சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைத்து, தொழில்முயற்சியாளர்கள் மீள்திறன் மிக்க மற்றும் நிலைபேறான வணிகங்களை உருவாக்கத் தேவையான நிதி ஆதரவுடன் நடைமுறை வழிகாட்டுதலையும் பெற உதவுகிறது. 

இத்திட்டத்தின் ஆரம்பமானது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் உள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புக் கடன் திட்டமான DFCC Aloka - Pragathi திட்டத்தின் அறிமுகத்தையும் குறித்தது. இந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், தொடக்க விழாவில் ஏழு பெண் தொழில்முயற்சியாளர்கள் DFCC Aloka - Pragathi கடன் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற்றனர். இது, நிதி அணுகலை விரிவுபடுத்தவும், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் வங்கி மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை வலுப்படுத்துகிறது. இத்திட்டத்தின் ஆரம்பம் குறித்துக் கருத்து தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைவர் / வணிக வங்கிப் பிரிவுத் தலைவர் பிரதீப் அல்விஸ், “இன்றைய காலகட்டத்தில் தொழிலொன்றை நடத்துவதற்கு நிதி கிடைப்பதை விட அதற்கும் மேலானவை தேவைப்படுகின்றன. தொழில்முயற்சியாளர்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல், நம்பகமான கூட்டாண்மைகள் மற்றும் அவர்களது தொழில்களுடன் இணைந்து பரிணமிக்கும் வங்கித் தீர்வுகள் ஆகியவையும் தேவைப்படுகின்றன. DFCC Pragathi இந்த அம்சங்களை ஒருங்கிணைந்த ஒரே திட்டத்தின் மூலம் ஒன்றிணைக்கிறது. இது, இலங்கைப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றிற்குப் பங்களிக்கும் அதே வேளையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவற்றுக்குச் சிறந்த ஆதரவை வழங்க எங்களுக்கு உதவுகிறது. DFCC Aloka - Pragathi மூலம், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வணிகச் சூழலை உருவாக்க உதவுவதற்கும் எங்களது அர்ப்பணிப்பை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம், என்றார். 

இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் அமைந்துள்ள 75-க்கும் மேற்பட்ட Pragathi வாடிக்கையாளர் சேவை அலுவலர்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக அணி, தொழில்முயற்சியாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலையும் உள்ளூர் நிபுணத்துவத்தையும் வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வங்கி ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பு, ஆசியா மற்றும் பசிபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் சங்கம் (Association of Development Financing Institutions in Asia and the Pacific - ADFIAP P) மற்றும் Karlsruhe ஆகியவற்றிலிருந்து பெற்ற மதிப்புமிக்க விருதுகள் உட்பட, உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 

வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட வணிகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக DFCC வங்கி பங்களித்து வருகிறது. DFCC Pragathi அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இது தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதற்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், மேலும் மீள்திறன் மிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கும் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

DFCC Pragathi மற்றும் DFCC Aloka - Pragathi பற்றிய மேலும் தகவல் விபரங்களுக்கு, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு DFCC வங்கி கிளையையும் நாடவும் அல்லது 011 235 0000 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278