Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Soy Connext 2026 இல் உலகளாவிய நிலைத்தன்மை முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ்

Aug 31, 2026 - 06:01 PM

Soy Connext 2026 இல் உலகளாவிய நிலைத்தன்மை முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ்
Mobitel Inner 1278

இலங்கையின் முன்னோடி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் இல்லாத கோழி உற்பத்தியாளரான நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ். [New Anthoneys Farms] நிறுவனமானது ஆகஸ்ட் 5 முதல் 7 வரை Hyatt Regency Chicago-வில் நடைபெற்ற அமெரிக்க சோயாபீன்ஸ் ஏற்றுமதிப்பேரவையின் [US Soybean Export Council- (USSEC) முதன்மை உச்சிமாநாடான Soy Connext 2026- உலகளாவிய அரங்கில் கௌரவிக்கப்பட்டுள்ளது. 

800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், நிகழ்வின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கேற்பைப் பதிவு செய்த இந்தச் சிறப்பு நிலைத்தன்மை அமர்வின்போது நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. Sustainable U.S. Soy மற்றும் Fed with Sustainable U.S. Soy லேபிள்களைப் பயன்படுத்தியதற்காக நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் உலகளாவிய நிலைத்தன்மை முன்னோடிகளில் ஒன்றாகப் பெயரிடப்பட்டது. அமெரிக்கக் கண்டங்கள், அகண்ட சீனப் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கௌரவிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இந்நிறுவனமும் இணைந்து கொண்ட நிலையில், தெற்காசியாவுக்கான இதுவரையிலான வலுவான வெளிப்பாடுகளில் ஒன்றாக இது அமைந்தது. 

இந்த அங்கீகாரமானது நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை வழங்குவதாக உள்ளது. இதற்கிணங்க 2023 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நிலைத்தன்மை உறுதிப்பாட்டு நெறிமுறையின் [U.S. Soy Sustainability Assurance Protocol] கீழ் சரிபார்க்கப்பட்ட Sustainable U.S. Soy உரிமத்தைப் பெற்ற தெற்காசியப் பிராந்தியத்தின் முதல் நிறுவனமாக இந்நிறுவனம் ஆனது. அந்த ஆரம்பகால நடவடிக்கை, பொறுப்பான கொள்முதல் நடைமுறையில் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி USSEC விவாதிக்கும்போது, இந்நிறுவனத்தை ஒரு முன்னுதாரணமாக மாற்றியுள்ளது, மேலும் இந்த வேறுபாடு குழுமத்தின் தீவன அரைக்கும் பிரிவான Anthoney's Feeds இன் நிலைத்தன்மைச் சான்றுகளில் பிரதிபலிக்கிறது, இதுவே நிறுவனம் கட்டியெழுப்பப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அற்ற தரநிலைக்கு அடித்தளமாக உள்ளது. 

எமக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரமானது, இத்துறையில் அனைவரும் இதைப் பற்றி விவாதிக்கத் தொடங்குவதற்கு முன்பே நாம் எடுத்த உறுதியான முடிவை வெளிப்படுத்துகிறது, என்று நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி நீல் சுரவீர கூறினார். நிலையான கொள்முதலும் லாபகரத்தன்மையும் எமக்கு ஒருபோதும் போட்டியிடும் இலக்குகளாக இருந்ததில்லை. அவை எப்போதும் ஒரே இலக்காகவே இருந்தன, மேலும் நாம் வளர்க்கும் ஒவ்வொரு கோழியிலும் அதை எமது வாடிக்கையாளர்கள் காண்கிறார்கள். 

சிகாகோ கௌரவம் நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மைல்கற்கள் நிறைந்த ஆண்டை மேலும் சிறப்பிக்கிறது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் பதப்படுத்தப்பட்ட உணவு பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக நிறுவனம் பெயரிடப்பட்டது, 2026ஆம் ஆண்டில் தனது 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது, மேலும் உணவு பதனிடல் மற்றும் உணவு பொதியிடல் கண்காட்சியில் [ProFood ProPack] உணவு மற்றும் பானங்கள் பிரிவில் சிறந்த அரங்கிற்கான முதல் இரண்டாம் இடத்தைப் பெற்றது. உற்பத்தித் திறனை 70 சதவீதம் வரை விரிவுபடுத்துவதற்காக, உலகளாவிய விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் ஆதரவு உட்பட, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான முதலீட்டையும் நிறுவனம் பெற்றது. 

இலங்கை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கொள்கலன்மயமாக்கப்பட்ட அமெரிக்க சோயாபீன்உணவு கொள்வனவாளராக உள்ளது, 2025 ஆம் ஆண்டில் சுமார் 255,000 தொன்களை இறக்குமதி செய்து, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மெட்ரிக் தொன்களை உற்பத்தி செய்யும் கால்நடைத் தீவனத் தொழிலுக்கு வழங்குகிறது, அதில் கோழிப்பண்ணைத் துறை மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது. Soy Connext இல் நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸின் பங்கேற்பானது, அந்த உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இலங்கையின் கோழிப்பண்ணைத் துறையின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278