Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!

Aug 31, 2026 - 01:40 PM

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!
Mobitel Inner 1278

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஆனையிறவு முதல் இரணைமடுச் சந்தி வரையான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக் கடவைகளில் 14 கடவைகள் இன்று வரை பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. 

இது குறித்து துறைசார் திணைக்களங்களுக்கு பலமுறை தெரியப்படுத்தப்பட்டும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நீண்டகாலமாக பிரஸ்தாபிக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1980 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களைக் காரணம் காட்டி, பயன்பாட்டிலுள்ள புகையிரதக் கடவைகளைச் சட்டபூர்வமாக்குவதையும், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும் புகையிரதத் திணைக்களம் நிராகரித்து வருகிறது. இதனால் இவ்வீதிகளில் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக, கடந்த கடந்த 26 ஆம் திகதி அன்று அறிவியல் நகர் விடியல் கைத்தொழிற்சாலைக் கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 17 வயது பாடசாலை மாணவியான செல்வி அக்சயா தினேஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். 

1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிபுரம், மலையாளபுரம், பொன்னகர், அம்பாள்குளம், செல்வாநகர், விவேகானந்தநகர், ஊற்றுப்புலம், உதயநகர் உள்ளிட்ட கிராமங்கள் உருவாகின. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், A-9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தினசரி இந்தப் பாதுகாப்பற்ற கடவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். வடக்குக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 

எனவே, தொடரும் இந்த அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாகத் தலையிடுமாறு கோரி கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சிபாரிசோடு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்று, கீழ்வரும் 14 கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, 

உமையாள்புரம் சோலை குடியிருப்பு வீதிக் கடவை. 

உமையாள்புரம் இரசாயனபுரம் வீதிக் கடவை. 

உமையாள்புரம் கழிவகற்றல் தொகுதி வீதிக் கடவை. 

உதயநகர் மேற்கு, கிழக்கு - A.9 வீதி இணைப்புக் கடவை. 

விவேகானந்தநகர், பாரதிபுரம் - A.9 வீதி இணைப்புக்கான துர்க்கையம்மன் வீதிக் கடவை. 

விவேகானந்தநகர், அம்பாள்குளம் - A.9 வீதி இணைப்புக்கான வயர்லெஸ் வீதிக் கடவை. 

பாரதிபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் செயலக வீதி - A.9 வீதி இணைப்புக்கான கடவை. 

மலையாளபுரம் - இரணைமடுச் சந்தி இணைப்புக்கான செபஸ்தியார் வீதிக் கடவை. 

அறிவியல்நகர் A.9 வீதி இணைப்புக்கான முதலாம் வீதிக் கடவை. 

KIST கைத்தொழில் வலயம் A.9 வீதி இணைப்புக்கான 2ஆம் வீதிக் கடவை. 

வானவில், விடியல் ஆடைத்தொழிற்சாலை A.9 வீதி இணைப்புக் கடவை. 

அறிவியல்நகர் பல்கலைக்கழக பிரதான வீதிக் கடவை. 

சிவபாதகலையகம் பாடசாலைக்கான பிரதான வீதிக் கடவை. 

அறிவியல்நகர் A.9 வீதி இணைப்புக்கான பிரதான வீதிக் கடவை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278