Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
சர்வதேச தினத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பில்லை

Aug 29, 2026 - 03:43 PM

சர்வதேச தினத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பில்லை
Mobitel Inner 1278

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்படுகின்று. 

இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ள கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஒகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம். 

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. 

எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்வதில் தடையில்லை என்றாலும், இந்த விஷயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278