Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
மனம் திறந்து பேச யாரும் இல்லை!

Aug 28, 2026 - 01:56 PM

மனம் திறந்து பேச யாரும் இல்லை!
Mobitel Inner 1278

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். முன்னதாக பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஜெயிலர் படம் அவரை சிறந்த வில்லன் நடிகராக உயர்த்தியது. எந்த அளவுக்கு படத்தின் மூலம் பிரபலமானாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகர் விநாயகன். 

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொச்சி கலூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதன்பின் 8 வயது சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சைக்குள்ளானார். 

இந்த நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாக நடிகர் விநாயகன் கூறியிருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டியில், 

"எனக்கு ஒரு மனைவி இருந்தாள். ஆனால் இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. சண்டைகள் எதுவும் இல்லை, ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவிதான். இப்போது அப்படி யாரும் இல்லை. 

என் தவறால்தான் என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றாள். என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் தனியாக, நொறுங்கிப் போயிருக்கிறேன். என்னால் வெளியே செல்லவும் முடியவில்லை. அது என் பிரச்சினை, அவளுடையதல்ல. 

அவள் இன்னும் என் எல்லாப் பொருட்களையும் பார்த்துக்கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்குத் தோன்றியது, இல்லையென்றால் என் மனைவிக்கு பிரச்சினைகள் வந்துவிடும். நான் அவரின் நிம்மதியைக் கொடுக்கப் போவதில்லை. அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும். இதுதான் அவருக்கும் எனக்கும் சிறந்தது. 

ஒன்றாக வாழ முடியாத நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்தோம், என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே எனது மனக்குமுறல்களைக் கொட்ட முடியும். அவரிடமிருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலகட்டத்திற்குத் என்னை தள்ளியது" என்று விநாயகன் வேதனையாக கூறியிருக்கிறார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278