Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

Aug 26, 2026 - 08:33 AM

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு
Mobitel Inner 1278

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றன. 

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) பிற்பகல் 2 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமறன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும், கொம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

அதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் , கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278