Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
முதலமைச்சராக விஜய் கிடைத்ததில் தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!

Aug 25, 2026 - 11:38 AM

முதலமைச்சராக விஜய் கிடைத்ததில் தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!
Mobitel Inner 1278

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் நாளை (26) திரைக்கு வர இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேஷி, ருக்மினி வசந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது, 

தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து வருகிறார்கள். சினிமா என்றால் தமிழ், கன்னடம், தெலுங்கு என்று இல்லை. அது இந்திய சினிமாதான். ‘டாக்ஸிக்’ படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். 

முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது. 

மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். 

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது. 

எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது. 

தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278