Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
அரசியல் என்ட்ரி எப்போது?

Aug 24, 2026 - 02:30 PM

அரசியல் என்ட்ரி எப்போது?
Mobitel Inner 1278

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவிமோகன் “நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை” என தெரிவித்தார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரவிமோகன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 

இரசிகர்களின் சில குடும்ப நிகழ்ச்சிகளில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதாக தெரிவித்த ரவிமோகன், இனிவரும் காலங்களில் இரசிகர் மன்ற நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்பேன் என உறுதியளித்தார். மேலும், செப்டம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள தனது பிறந்தநாள் விழாவில் இரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது நடிப்பில் வெளியான வெற்றிப்படமான ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். 

அரசியல் குறித்த கேள்விக்கும் ரவிமோகன் பதிலளித்தார். “நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நல்லது செய்ய விரும்புபவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் இரசிகர்களுடனான சந்திப்பு, ‘தனி ஒருவன் 2’ படத்தின் அப்டேட் மற்றும் அரசியல் குறித்த தனது கருத்து என பல்வேறு விஷயங்களை ரவிமோகன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278