Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
5 வது முறையாக இடம்பெறும் 2026 ஆம் ஆண்டிற்கான WCIC PRATHIBHABHISHEKA - பெண் தொழில்முனைவோர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Aug 24, 2026 - 11:59 AM

5 வது முறையாக இடம்பெறும் 2026 ஆம் ஆண்டிற்கான WCIC PRATHIBHABHISHEKA - பெண் தொழில்முனைவோர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
Mobitel Inner 1278

இலங்கையின் மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் வகையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு மீண்டும் நடைபெறவுள்ளது ஆகஸ்ட் 2026, கொழும்பு - இலங்கையின் மிக மதிப்புமிக்க வணிக அங்கீகாரத் திட்டமான WCIC PRATHIBHABHISHEKA - பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2026 ஆரம்பிக்கப்படவுள்ளமை குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனம் (Womens Chamber of Industry and Commerce - WCIC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதற்காக இலங்கை மற்றும் சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முந்தைய ஆண்டுகளில் இடம்பெற்ற விருதுகள் நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, வணிகத் திறன், மீள்திறன், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் பெண் தொழில்முனைவோரை இந்த விருதுகள் தொடர்ந்து சிறப்பிக்கின்றன. 

இதன் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனத்தின் தலைவி கயானி டி அல்விஸ் கூறியதாவது: 

“தொழில்துறைகளைத் தொடர்ந்து உருமாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பெண் தொழில்முனைவோரை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதன்மையான தளமாக WCIC Prathibhabhisheka வளர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நிகழ்வை நாங்கள் தொடங்கும் வேளையில், இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெண் தொழில்முனைவோரை அவர்களின் பயணங்களை வெளிப்படுத்தவும், அடுத்த தலைமுறை வணிகத் தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் அழைக்கிறோம். எங்களின் கடந்தகால வெற்றியாளர்களின் வெற்றிக் கதைகள், இந்த அங்கீகாரம் தொழில்முனைவோருக்கும் அவர்களின் வணிகங்களுக்கும் ஏற்படுத்தும் நற்பலனை நிரூபிக்கின்றன.” 

முந்தைய நிகழ்விற்கு, அனைத்து அளவிலான வணிகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் பங்கேற்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஒட்டுமொத்த விருதுகள், பிரிவு விருதுகள், மாகாண விருதுகள் மற்றும் சிறப்பு அங்கீகார விருதுகள் உட்பட மொத்தம் 47 விருதுகள் வழங்கப்பட்டன. இது, வணிகத்தில் பெண்களை அங்கீகரிப்பதற்கான இலங்கையின் தேசிய அளவுகோலாக இந்தத் திட்டத்தின் அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக, இணைத் தலைவர்கள் நிலானி செனவிரத்ன மற்றும் வத்சலா விக்ரமநாயக்க ஆகியோர் கூறுகையில், 

“ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோரின் வலுவான பங்கேற்பை நாங்கள் காண்கிறோம். இது, வணிகத்தில் இலங்கைப் பெண்களின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையையும் இலட்சியத்தையும் பிரதிபலிக்கிறது. சாதனைகளை அங்கீகரிப்பதைத் தாண்டி, Prathibhabhisheka தொழில்முனைவோருக்கு வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, மதிப்புமிக்க வலையமைப்புகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. நம்பிக்கைக்குரிய தொடக்க வணிக நிறுவனங்கள் முதல் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் வரை, பெண்களால் வழிநடத்தப்படும் வணிகங்களை இந்த ஆண்டுப் பயணத்தில் அங்கம் வகிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” 

தொடக்க வணிக நிறுவனங்கள், நுண், சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிகப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. பிரிவு விருதுகளுக்குக் கூடுதலாக, சிறந்த விண்ணப்பதாரர்கள் பல மதிப்புமிக்க சிறப்பு விருதுகளுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். இதன் உச்சகட்டமாக, பெரிதும் விரும்பப்படும் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் 2026” என்ற பட்டம் வழங்கப்படும். 

இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மாகாண ரீதியில் அங்கீகரிப்பதற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்வதுடன், சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் சர்வதேசப் பிரிவின் கீழ் போட்டியிடுவதற்கான ஒரு தளத்தையும் வழங்குகிறது. 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.wcicsl.lk என்ற இணையத்தளத்திலிருந்து தங்களுக்கு விருப்பமான மொழியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது WCIC அலுவலகத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான தேவையான ஆவணங்களை, விரைவில் அறிவிக்கப்படவுள்ள இறுதித் திகதிக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும். 

WCIC Prathibhabhisheka நிகழ்விற்குப் பின்வரும் நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன: AIA Insurance (Platinum பங்காளர்), DFCC ஆலோகா (Diamond/உத்தியோகபூர்வ வங்கிச் சேவை பங்காளர்), McLarens (Gold பங்காளர்), ஹேலீஸ் பிஎல்சி, மலிபன், யூனிலீவர் அருணல்ல (Silver பங்காளர்கள்) மற்றும் Imrpa Teas, Pidilite (Bronze பங்காளர்கள்). இலங்கையின் வணிகத் துறையில் பெண்களுக்கான தேசிய அமைப்பான Women's Chamber of Industry and Commerce (WCIC), கொள்கை வாதம், தொடர்புகளை வளர்த்தல், திறன் மேம்பாடு மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம் பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் வணிகச் சூழலை வடிவமைக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில் Prathibhabhisheka அதன் முதன்மைத் திட்டமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. 

மேலதிக தகவல்களுக்கு 076 6848080 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278