Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Aug 17, 2026 - 03:25 PM

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!
Mobitel Inner 1278


அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன. 

குறித்த ஒலிப்பதிவில், உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து, அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர் 

இந்நிலையில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், வடமாகாண சபையின் முன்பாக கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார். 

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278