Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
PepperCube T25 தரவரிசையில் இலங்கையின் விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமங்களாக பேபி செரமி மற்றும் குளோகார்ட் இற்கு அங்கீகாரம்

Jul 17, 2026 - 10:32 AM

PepperCube T25 தரவரிசையில் இலங்கையின் விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமங்களாக பேபி செரமி மற்றும் குளோகார்ட் இற்கு அங்கீகாரம்
Mobitel Inner 1278

Hemas Consumer Brands நிறுவனத்தின் மிகவும் நம்பகமான இரு வர்த்தகநாமங்களாக Baby Cheramy (பேபி செரமி) மற்றும் Clogard (குளோகார்ட்) ஆகியன, PepperCube Consultants நிறுவனத்தால் நடத்தப்பட்டு, LMD இதழால் வெளியிடப்பட்ட ஆய்வில், இலங்கையின் விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த T25 விருப்பத்திற்குரிய தயாரிப்பு/சேவை வர்த்தகநாமங்களின் பெறுபேறுகள், 12 மாத காலப்பகுதியில் (மே 2025 - ஏப்ரல் 2026) நாடளாவிய மட்டத்தில் 12,000 பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த ஆய்வானது, நுகர்வோர் யாராலும் தூண்டப்படாத பரிந்துரைகளின் அடிப்படையில் வருடாந்தம் 12,000 நுகர்வோர் பதில்களைப் பதிவு செய்வதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 வர்த்தகநாமங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆங்கில அகரவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டிற்கான ஆய்வில் Baby Cheramy மற்றும் Clogard ஆகிய இரு வர்த்தகநாமங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதானது, இலங்கை வீடுகளில் அவை கொண்டுள்ள வலுவான இருப்பு மற்றும் நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் அவை பெற்றுள்ள ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. 

Baby Cheramy நிறுவனம் 65 ஆண்டுகளாக இலங்கைத் தாய்மார்களின் நம்பகமான பங்காளியாக விளங்கி வருவதுடன், குடும்பங்களின் மிக உன்னதமான தருணங்களில் அவர்களுடன் பயணித்து வருகிறது. அன்பு, பாதுகாப்பு, முழுமையான குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட இந்த வர்த்தகநாமம், பெற்றோரின் பயணங்களில் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. இலங்கையின் விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டிருப்பதானது, குடும்பங்கள் மத்தியில் இந்த வர்த்தகநாமத்திற்கு உள்ள நுகர்வோர் விருப்பத்தை காட்டுகிறது. அத்துடன், LMD இதழில் ‘Most Loved Brand’ (மிகவும் நேசிக்கப்படும் வர்த்தகநாமம்) மற்றும் 'Best of Best’ (சிறந்ததிலும் சிறந்தது) வர்த்தகநாமம் ஆகப் பட்டியலிடப்பட்டிருப்பதானது, குழந்தை பராமரிப்புத் துறையில் Baby Cheramy வர்த்தகநாமத்தின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. 

இது குறித்து, ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் துள்சி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “PepperCube T25 ஆய்வில் விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதானது, ஒரு தனித்துவமான கௌரவமாகும். எமது வர்த்தகநாமங்கள் தலைமுறை தலைமுறைகளாக குழந்தைகளை அரவணைத்து வளர்த்துள்ளன. குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப உருவாகும் நம்பகமான, உயர்தர தயாரிப்புகள் மூலம் சிறந்த மதிப்பைத் தொடர்ச்சியாக புத்தாக்கத்தை வெளிப்படுத்தவும் எம்மைத் தூண்டும் அந்த உணர்வுபூர்வமான தொடர்பிற்கு நாம் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார். 

இதேபோல், குளோகார்ட் வர்த்தகநாமமும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை குடும்பங்களின் வாய்ச்சுகாதார பராமரிப்பு நடைமுறைகளில் ஒரு நம்பகமான துணையாக இருந்து வருகிறது. தமது பரந்த தயாரிப்பு வகைகளின் மூலம் முழுமையான வாய்ச்சுகாதார பராமரிப்பு பாதுகாப்பை வழங்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தகநாமம், சிறந்த வாய்ச் சுகாதார தீர்வுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு மூலம் நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. T25 PepperCube ஆய்வில் இவ்வர்த்தகநாமம் பெற்றுள்ள அங்கீகாரமானது, இலங்கை குடும்பங்கள் இந்த வர்த்தகநாமத்தின் மீது தொடர்ச்சியாக வைத்துள்ள நம்பிக்கையையும், சிறந்த வாய் ஆரோக்கியத்தை வழங்குவதில் அதன் பங்கையும் பிரதிபலிக்கிறது. 

மேலும், குளோகார்ட் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் LMD இதழால் 'மிகவும் நேசிக்கப்படும் தயாரிப்பு வர்த்தகநாமங்களில்' ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த பொருட்களையும் விஞ்ஞான ரீதியான புத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள வாய்ச்சுகாதார பராமரிப்புத் தீர்வுகளை வழங்க குளோகார்ட் தொடர்ச்சியாக பரிணமித்து வருகிறது. இந்த வாக்குறுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், குளோகார்ட் மற்றும் FDI World Dental Federation ஆகியன இலங்கையில் ஒட்டுமொத்த வாய்ச்சுகாதார ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இணைந்து செயற்பட்டு வருகின்றன. 

ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் சச்சினி கமகே வெலுங்கொட கருத்துத் தெரிவிக்கையில், “LMD இதழால் வெளியிடப்பட்ட T25 PepperCube ஆய்வில் குளோகார்ட் ஒரு விருப்பத்திற்குரிய தயாரிப்பு வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் தமது வாய்ச் சுகாதார பராமரிப்பு நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை குடும்பங்கள் எம் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையையும் உறுதியையும் இந்த அங்கீகாரமானது பிரதிபலிக்கிறது!” என்றார். 

எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் உள்ள இரு முன்னணி வர்த்தகநாமங்களுக்கும் கிடைத்துள்ள இந்த இரட்டை அங்கீகாரமானது, பல ஆண்டுகளாக தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்த வர்த்தகநாமங்களை மாற்றிக்கொண்ட மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களது தொடர்ச்சியான நம்பிக்கையே இரு வர்த்தகநாமங்களின் பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், தொடர்ச்சியாக புத்தாக்கங்களைப் புகுத்தவும், தரநிலைகளை உயர்த்தவும், அனைத்து இலங்கையர்களின் தேவைகளைத் தீர்க்கும் தயாரிப்புகளை வழங்கவும் தூண்டுகோலாக இது அமைந்துள்ளது. 

Hemas Consumer Brands பற்றி 

இலங்கையின் இல்லங்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் 60 ஆண்டுகளாக முன்னணியில் திகழும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனம், குடும்பங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிய இலட்சியத்தைக் கொண்டிருப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் தகவல்களைப் பயன்படுத்தி புத்தாக்கங்களைப் புகுத்துவதிலும், நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளை உருவாக்குவதிலும் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இது இலங்கையில் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் இயக்கப்படும் வர்த்தகநாமங்களை நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைநிறுத்த உதவியுள்ளது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தனது தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையைத் தொடர்ச்சியாக வளப்படுத்தி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278