Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
அமானா வங்கி, அசர்பைஜானில் நடைபெற்ற IsDB Group’இன் வருடாந்த சந்திப்புகளில் அங்கம் பெற்றது

Jul 16, 2026 - 11:34 AM

அமானா வங்கி, அசர்பைஜானில் நடைபெற்ற IsDB Group’இன் வருடாந்த சந்திப்புகளில் அங்கம் பெற்றது
Mobitel Inner 1278

அமானா வங்கி அண்மையில் அசர்பைஜானின், பக்கு நகரில் நடைபெற்ற Islamic Development Bank (IsDB) தனியார் துறை கருத்தரங்கில் பங்கேற்றிருந்தது. IsDB Groupஇன் 2026 வருடாந்த ஆளுனர்கள் சபை சந்திப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் அசர்பைஜான் ஜனாதிபதி கௌரவ இல்ஹாம் அலியேவ் மற்றும் IsDB Group இன் தவிசாளர் கௌரவ. கலாநிதி. முஹம்மட் அல் ஜஸ்ஸர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

“நிலைபேறான சுபீட்சத்திற்கான பிராந்திய ஒருங்கிணைப்பு” (Regional Integration for Sustainable Prosperity) எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற, AAA தரமதிப்பீடு பெற்ற பன்முக அபிவிருத்தி நிறுவனமான IsDB குழுமத்தின் இந்த பிரதான மாநாடு, அதன் 57 உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்கள், நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அபிவிருத்திப் பணியாளர்கள் மற்றும் நிதித்துறைத் தலைவர்களை ஒன்றிணைத்திருந்தது. இந்த வருடாந்த கூட்டமானது, IsDB தனியார் துறை அமர்வும் உறுப்பு நாடுகளைப் பாதிக்கும் முக்கிய அபிவிருத்திப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கும், அதேவேளையில் கலந்துரையாடல்கள், அறிவுப் பரிமாற்றங்கள் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகளை வளர்ப்பதற்குமான ஒரு பிரதான தளமாக விளங்குகின்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 78 நாடுகளைச் சேர்ந்த 4,400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், 46 நிறுவனத் தலைவர்கள் உட்படப் பல பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் நிறைவாக, உறுப்பு நாடுகள், பிராந்திய நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைப் பங்காளர்களுடன் மொத்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 67 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. 

IsDB Group இன் அங்கத்துவ நாடாக இலங்கை காணப்படாத போதிலும், அமானா வங்கியின் பிரதான பங்குதாரரான IsDB Group, அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட மற்றும் மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை வழங்குவது போன்றவற்றினூடாக ஒழுக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதன் நிலையை வெளிப்படுத்தி, முஸ்லிம் சிறுபாண்மை நாட்டில் இஸ்லாமிய வங்கியியலை நிறுவி விருத்தியடையச் செய்துள்ளமை தொடர்பான வெற்றிகரமான கதையை பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்தது. இந்த வெற்றிகரமான செயற்பாட்டுக்கு மேலதிகமாக, அமானா வங்கி, ஸ்தாபக அனுசரணையாளர் என்ற ரீதியில், OrphanCare எனும் தனது தனித்துவமான கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெற்றது. இதன் மூலம், அநாதரவாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீண்டகால நிதி உதவிகளையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளையும் வழங்கி அவர்களை வலுவூட்டுவதன் ஊடாக, சமூகத்தால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் ஒரு சமூகத் தேவையை வங்கி நிவர்த்தி செய்கிறது. அத்துடன், அவர்களை ஒரு “இரண்டாவது கைவிடல்” நிலைக்கு ஆளாவதிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த முயற்சி, இனம், மதம், பிராந்தியம் அல்லது சாதி ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காண்பிக்கப்படக்கூடாது என வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அமானா வங்கியின் சார்பாக முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், சிரேஷ்ட உப தலைவர் – வணிக வங்கியியல் இர்ஷாத் இக்பால், உதவி உப தலைவர் – சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் அசிம் ராலி மற்றும் மூலோபாயம் மற்றும் நிலைபேறாண்மை முகாமையாளர் மஸ்னவி ருமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

வங்கியின் பங்கேற்பு தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் வெற்றிகரமான கதையை, இந்த பெருமைக்குரிய தளத்தில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு எமக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் மீண்டும் பெருமிதம் அடைகிறோம். IsDB தனியார் துறை அமர்வு, உலகின் பல பாகங்களையும் சேர்ந்த துறைசார்ந்தவர்களிடையே கைகோர்ப்பு, அறிவு பகிர்வு மற்றும் வியாபார பங்காண்மைகளை ஊக்குவிப்பதற்கான சிறந்த தளமாக அமைந்துள்ளது. அங்கத்தவரல்லாத நாட்டில் இயங்கும் வங்கி எனும் வகையில், இஸ்லாமிய வங்கியியலை மேம்படுத்துவது மற்றும் எமது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான OrphanCare பற்றிய நாம் கடந்து வந்த பாதை பற்றிய வெளிப்படுத்தல்களை வழங்கியிருந்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வணிகம், இணைப்பு, வலு, உணவு பாதுகாப்பு, இஸ்லாமிய நிதியியல், தனியார் துறை வளர்ச்சி, காலநிலை செயற்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்றன தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்களினூடாக, வளர்ந்து வரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததுடன், நிலைபேறான மற்றும் உள்ளடக்கமான வளர்ச்சிக்கான எமது அர்ப்பணிப்பை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278