Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற 360 Skin Clinic மற்றும் 360 Aesthetics

Jul 16, 2026 - 11:28 AM

ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற 360 Skin Clinic மற்றும் 360 Aesthetics
Mobitel Inner 1278

360 ஸ்கின் கிளினிக் (360 Skin Clinic) மற்றும் 360 எஸ்தெடிக்ஸ் (360 Aesthetics) ஆகிய நிறுவனங்கள், தங்களது மருத்துவ விசேடத்துவம் மற்றும் சேவை தொடர்பான புத்தாக்க பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பெறுமதி வாய்ந்த ISO 9001:2015 / SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளன. இதன் மூலம் அழகு சாதனவியல், அழகியல், ஆரோக்கிய பராமரிப்புத் துறையில் (cosmetic, aesthetic, wellness care) இலங்கையின் முன்னணி சேவை வழங்குநர்களில் ஒன்றாக தமது நிலையை அவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. 

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டு சான்றிதழானது, 360 Wellness Centre (Pvt) Ltd நிறுவனமானது, தர உத்தரவாதம் மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் தொடர்பில் உலகின் மிகவும் மதிக்கப்படும் அளவுகோல்களில் ஒன்றான ISO 9001:2015 தரச் சான்றிதழின் இறுக்கமான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் தர முகாமைத்துவ கட்டமைப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை அங்கீகரிக்கிறது. 

பிரபல அழகுசாதன மற்றும் அழகியல் மருத்துவ நிபுணரான, ‘டாக்டர் செர்ரி’ என பரவலாக அறியப்படும் டாக்டர் சாரா பாஸி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட 360 வர்த்தகநாமம், மருத்துவ நிபுணத்துவத்துடன் தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களின் சுகவாழ்வுக்கான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து வழங்குவதன் மூலம் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களாக, நெறிமுறை சார்ந்த நடைமுறைகள், புத்தாக்கம் மற்றும் நம்பகமான முடிவுகளில் நிலையான கவனத்தைச் செலுத்தி, இம்மருத்துவமனை தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றது. 

இந்தச் சான்றிதழ் குறித்து 360 Skin Clinic மற்றும் 360 Aesthetics நிறுவனத்தின் நிறுவுனர் டாக்டர் சாரா பாஸி கருத்துத் தெரிவிக்கையில், “இந்தச் சான்றிதழானது, எமது ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு பெருமையான தருணம் என்பதுடன், நாம் ஒவ்வொரு நாளும் நிலைநிறுத்துவதற்கு பாடுபடும் தரத்தின் பிரதிபலிப்பாகும். எப்போதும் எமது தொலைநோக்குப் பார்வையின் மையமாக, தரமான பராமரிப்பு, சிகிச்சை பெறுபவரின் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை விசேடத்துவம் ஆகியன இருந்து வருகின்றன. ISO 9001:2015 தரச் சான்றிதழ் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமையானது, எம் மீது நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.” என்றார். 

இந்த சாதனையானது 360 Skin Clinic மற்றும் 360 Aesthetics நிறுவனங்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஒவ்வொரு சிகிச்சையும், ஆலோசனையும், வாடிக்கையாளர் தொடர்பும் சீரான தன்மை, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சிகிச்சை பெறுபவரின் திருப்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறைகளால் வழிநடத்தப்படுவதை உறுதி செய்கிறது. 

ISO 9001:2015 ஆனது, தரப்படுத்தல் தொடர்பான சர்வதேச அமைப்பினால் (ISO) உருவாக்கப்பட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இது நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சேவையின் சீரான தரத்தைப் பேணவும் வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ச்சியாக மேம்படுத்தவுமான ஒரு கட்டமைப்பு மாதிரியை வழங்குகிறது. டாக்டர் சாரா மேலும் தெரிவிக்கையில், “360 Skin Clinic மற்றும் 360 Aesthetics நிறுவனத்தில், அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுப்புணர்வுடனும், துல்லியம் மற்றும் இரக்கத்துடனும் அணுக வேண்டும் என நாம் நம்புகிறோம். இந்த மைல்கல்லானது, இலங்கையில் அழகியல் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பில் தொடர்ச்சியாக எமது தரத்தை உயர்த்துவதற்கு எம்மை தூண்டுகிறது.” என்றார். 

360 Skin Clinic மற்றும் 360 Aesthetics நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தச் சான்றிதழானது நம்பகமான, உயர்தர சேவைகளை வழங்குவதற்கும், வலுவான தரக்கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பேணுவதற்கும், உள்ளக செயன்முறைகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறைத் தன்மையை உறுதி செய்வதற்கும், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதற்குமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. 

இந்தச் சான்றிதழின் நோக்கு எல்லையானது, மருத்துவ மற்றும் அழகுசார் சருமப் பராமரிப்பு (medical and cosmetic skincare), கூந்தல் பராமரிப்புத் தீர்வுகள், அழகியல் ஆலோசனைகள், முகத்திற்கான சிகிச்சைகள் (facial treatments), அழகுசார் செயன்முறைகள், நகப் பராமரிப்பு, அறுவைசிகிச்சை மேம்படுத்தல்கள், கூந்தல் மாற்றீட்டு அறுவைசிகிச்சை (hair transplantation) உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை உள்ளடக்கியுள்ளது. 

இந்த அங்கீகாரமானது, மேம்பட்ட நுட்பங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பயிற்சி பெற்ற நிபுணர்களால் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க வழங்கப்படும் பராமரிப்பை தாம் பெறுகிறோம் எனும் மேலதிக நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 360 Skin Clinic நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதலிருந்தே, இலங்கையில் அழகு, ஆரோக்கியம் மற்றும் சுய பராமரிப்பு ஆகியவற்றை மீள்வரையறை செய்கின்ற, ஒரு நோக்கத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு வருகிறது. ஒரு தொலைநோக்கு மிக்க எண்ணகருவாக ஆரம்பிக்கப்பட்ட இது, இன்று வாடிக்கையாளர்கள் தங்களது தோற்றத்திலும் உணர்விலும் சிறந்த முறையில் இருக்க உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பன்முகத் துறையிலான நிபுணத்துவத்தைக் கொண்டு குழுவினரின் ஆதரவுடன் ஒரு நம்பகமான வர்த்தகநாமமாக வளர்ந்துள்ளது. 

இந்த மருத்துவமனையானது, விரிவான ஆலோசனைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மதிப்பீடுகளை நடத்துவதன் மூலம், தனிநபர்களின் சருமப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய இலக்குகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குவதில் பெயர் பெற்று விளங்குகின்றது. அதன் மருத்துவ அழகியல் குழுவானது, இத்துறையில் முன்னிலையில் திகழும் பொருட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான சிகிச்சைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 

ISO 9001:2015 / SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றதன் மூலம், 360 Skin Clinic மற்றும் 360 Aesthetics நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த பராமரிப்பு, நம்பகமான பெறுபேறுகள் மற்றும் அவர்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய உன்னதமான தரத்தை வழங்குவதற்கான நிறுவனத்தின் வாக்குறுதியை மேலும் பலப்படுத்துகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278