Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
டித்வா தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான FR மனு பரிசீலனைக்கு

Jul 16, 2026 - 10:20 AM

டித்வா தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான FR மனு பரிசீலனைக்கு
Mobitel Inner 1278

"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கண்டிப் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கத்தின் இந்த வீழ்ச்சி காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். 

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை (Guidelines) அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278