Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
கொழும்பு 05 இல் Home Lands Skyline நிறுவனத்தின் Pentara Residencies கட்டுமானப் பணிகளை CHEC தொடங்கியுள்ளது

Jul 14, 2026 - 04:27 PM

கொழும்பு 05 இல் Home Lands Skyline நிறுவனத்தின் Pentara Residencies கட்டுமானப் பணிகளை CHEC தொடங்கியுள்ளது
Mobitel Inner 1278

கொழும்பு 05 இல் Home Lands Skyline நிறுவனத்தின் உயர் ரக, வானளாவிய இரட்டைக் கோபுர குடியிருப்புத் திட்டமான Pentara Residencies கட்டுமானப் பணிகளை China Harbour Engineering Company (CHEC) தொடங்கியுள்ளது. கொழும்பு 05 இல் உள்ள Pentara Residencies அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுடன் கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளன. 

இந்த நிகழ்வில் CHEC, Home Lands Skyline ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், செயற்திட்ட ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒன்றிணைந்தனர். இது கொழும்பில் குறிப்பிடத்தக்க வகையில் அமையவிருக்கும் குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்களில் ஒன்றின் பின்னணியில் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியில் உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. இந்த நிகழ்வு, இத்திட்டத்தை திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் என்ற கட்டத்திலிருந்து கட்டுமானம் மற்றும் செயற்திட்ட அமுலாக்கத்திற்கு முறைப்படி மாற்றுவதைக் குறித்தது. 

இத்திட்டத்தின் கட்டுமானப் பங்காளராக கைகோர்த்துள்ள, CHEC தனது பொறியியல் வலிமை, வானளாவிய கட்டிடங்களின் கட்டுமான நிபுணத்துவம் மற்றும் பெரிய அளவிலான செயற்திட்டங்களை நிறைவேற்றும் திறன்களை இத்திட்டத்திற்கு வழங்கும். குறிப்பாக, இத்திட்டத்தின் தொழில்நுட்ப அளவு மற்றும் கொழும்பின் மிகவும் போக்குவரத்து வசதிமிக்க நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றில் அது அமைந்துள்ளதைக் கருத்தில் கொள்ளும்போது, Pentara Residencies திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் CHEC இன் பங்கு முக்கிய மையமாகவுள்ளது. Home Lands Skyline அமைக்கும் Pentara Residencies, கொழும்பின் மத்திய நிர்வாக மற்றும் குடியிருப்பு மாவட்டத்தில், கொழும்பு நகர மையத்திலிருந்து சுமார் 4 கி.மீ., பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ., மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனையத்திலிருந்து 7.4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. Pentara Residencies என்பது கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஒரு உயர் ரக இரட்டைக் கோபுர குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமாகும். இது சுமார் 87,000 சதுர மீட்டர் மொத்த தரைப்பரப்பளவைக் கொண்ட 31 மற்றும் 41 மாடிக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. 

கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவது, இச்செயற்திட்டத்தின் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இது CHEC மற்றும் Home Lands Skyline நிறுவனங்களுக்கும், பரந்த செயற்திட்ட அணிக்கும் இடையிலான சிறப்பான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. கொழும்பில் மாற்றம் கண்டு வரும் நகர்ப்புற தோற்றத்திற்குப் பங்களிக்கும் ஒரு உயர் ரக குடியிருப்புத் திட்டத்தை வழங்குவதில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது. இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த China Harbour Engineering Company (CHEC) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வாங் காங் அவர்கள், “Home Lands Skyline அமைக்கும் Pentara Residencies என்பது கொழும்பில் அமையவிருக்கும் ஒரு முக்கியமான வானளாவிய குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டத்திற்கான கட்டுமானப் பங்காளராகக் கைகோர்ப்பதில் CHEC பெருமை கொள்கிறது. இத்தகைய அளவில் பிரமாண்டமான ஒரு திட்டத்திற்கு வலுவான பொறியியல் ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடான செயற்திட்ட முகாமைத்துவம், மற்றும் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான தெளிவான அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. உயர் கட்டுமானத் தராதரங்களைப் பூர்த்தி செய்து, கொழும்பின் குடியிருப்புத் துறையில் நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு திட்டத்தை வழங்குவதற்கான பகிரப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் Home Lands Skyline உடனான எங்கள் கூட்டாண்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.” 

கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவது, தொழில்துறை ஈடுபாடு, விநியோகஸ்தர்களின் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நகரத்திற்கு உயர் தரமான அடுக்குமாடி வாழ்க்கை உள்கட்டமைப்பைச் சேர்ப்பதன் மூலம், ஒரு நவீன நகர்ப்புற மையமாக கொழும்பின் ஸ்தானத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. CHEC இன் ஈடுபாடு, இலங்கையின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு அது வழங்கி வருகின்ற தொடர்ச்சியான பங்களிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது. சிக்கலான, பெரிய அளவிலான திட்டங்களை வழங்குவதில் அனுபவம் கொண்ட CHEC, சர்வதேச கட்டுமானத் தரங்கள், தொழில்நுட்ப ஒழுக்கம் மற்றும் திட்டத்தை நிறைவேற்றும் சிறப்பு ஆகியவற்றைப் பேணிக்காத்து, Pentara Residencies குடியிருப்பினை வெற்றிகரமாக முடிக்க உதவுவதற்கு சிறந்த ஸ்தானத்தில் உள்ளது. 

கொழும்பின் குடியிருப்பு வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குப் பங்களிப்பதற்காக, CHEC மற்றும் Home Lands Skyline ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பகிரப்பட்ட குறிக்கோளை இத்திட்டம் பிரதிபலிக்கிறது. Pentara Residencies கட்டி முடிக்கப்பட்டதும், கொழும்பு 05 இல் ஒரு முக்கியமான தனித்துவ குடியிருப்புத் திட்டமாக உருவெடுத்து, அப்பிரதேசத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் நகரத்தின் மாறிவரும் வானளாவிய கட்டிடங்களுக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278