Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
தொலைபேசியால் தாக்கப்பட்ட கணவர் பலி!

Jul 13, 2026 - 06:18 PM

தொலைபேசியால் தாக்கப்பட்ட கணவர் பலி!
Mobitel Inner 1278

அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் தொலைபேசி தொடர்பானதாக இருக்கிறது. 

இந்த தொலைபேசியால் கணவன் மனைவி இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஒடிசாவில் அது போன்ற ஒரு சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள சிம்னிபதிபாடா என்ற இடத்தில் குடும்பத் தகராறின் போது மனைவி தனது கணவனை தொலைபேசியால் தலையில் தாக்கியதில் கணவர் ஒருவர் உயிரிழந்தார். 

சம்பத்தன்று இரவு குடும்ப பிரச்னையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

வாய்ச்சண்டையில் தொடங்கிய இச்சண்டை பின்னர் அடிதடியில் முடிந்தது. சண்டையில் மனைவி தனது கையில் இருந்த தொலைபேசியால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் கணவர் படுகாயம் அடைந்தார். 

உடனே அவரை அங்குள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஓரளவு நிலைமை சீரடைந்ததால் கணவர் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவரது நிலைமை திடீரென மோசமடைந்தது. உடனே அவரை மீண்டும் வைத்தியசாலையில் சேர்த்தனர். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

தொலைபேசியால் தாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278