Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
எளிதாகக் கடன் கிடைக்கும் என நம்பி ஏமாறாதீர்கள்!

Jul 11, 2026 - 04:22 PM

எளிதாகக் கடன் கிடைக்கும் என நம்பி ஏமாறாதீர்கள்!
Mobitel Inner 1278

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறும் அந்தச் குழு அறிவுறுத்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம் எனப் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. 

இந்தச் செய்திகளில், சில நிறுவனங்கள் 5,000 முதல் 150,000 ரூபாய் வரையிலும், வேறு சில நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கத் தயார் எனத் தெரிவிக்கின்றன. 

"ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை" என்பது இவர்களின் முக்கிய கவர்ச்சியாக உள்ளது. 

இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும். 

கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்யுமாறு அவர்கள் பணிக்கின்றனர். அதை கிளிக் செய்தவுடன், அவர்கள் மோசடிகாரர்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். 

இந்த இணைப்பின் மூலம் 'ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்' (RAT) எனப்படும் மென்பொருள் பயனரின் கைபேசிக்குள் நுழைகிறது. இது கைபேசியின் கட்டுப்பாட்டை மோசடிகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. 

இதன் மூலம் கைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், நண்பர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் அவர்களால் அணுக முடியும். குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

முதலில் சிறிய கடன் தொகையை வழங்கி, பின்னர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்குப் பெரிய கடனாக மாற்றி, வட்டி மற்றும் நிபந்தனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்துகின்றனர். 

நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், தங்களின் நண்பர்கள் முன்னிலையில் கடன் பெற்றுச் சிக்கலில் சிக்கியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். 

இலகுவான கடன் பெறச் சென்று இறுதியில் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278