Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Jul 10, 2026 - 08:19 PM

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Mobitel Inner 1278

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவர்களில் உள்ள அனைத்துக் கைதிகளும் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருப்பினும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. 

சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்குப் போதுமான ஆரோக்கியமான நிலையில் இல்லாததே இதற்குக் காரணமாகும். 

இதனிடையே, மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கொல்லப்பட்ட இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாகவும், ஏனைய காவலர்கள் சார்ஜன்ட் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்துக் கைதிகளும் இன்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 

சிறைச்சாலை மோதலில் பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜன்ட் கமகே உபாலியின் உடல், இன்று கம்புறுபிட்டியவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த மோதலில் உயிரிழந்த சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் அம்பகஹவெவ பொது மயானத்தில் நடைபெற்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278