Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
கண்டி எசல பெரஹெர ஒகஸ்ட் -13 இல் ஆரம்பம்

Jul 8, 2026 - 05:14 PM

கண்டி எசல பெரஹெர ஒகஸ்ட் -13  இல் ஆரம்பம்
Mobitel Inner 1278

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். 

பெரஹெர நடைபெறும் திகதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, இன்று (08) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அதற்கமைய, ஒகஸ்ட் 13 முதல் 17 வரையில் நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு மகா தேவாலயங்களில் உட்புற பெரஹெர நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிட்டார். 

ஒகஸ்ட் 18 முதல் 22 வரையில் முதலாவது 'கும்பல்' பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

ஒகஸ்ட் 23 ஆம் திகதி முதலாவது 'ரந்தோலி' பெரஹெர ஆரம்பமாகவுள்ளது. 

ஆகஸ்ட் 27 ஆம் திகதி இறுதி மகா 'ரந்தோலி' பெரஹெர நடைபெறும். 

ஆகஸ்ட் 28 ஆம் திகதி நீர் வெட்டுதல் மற்றும் பகல் பெரஹெர இடம்பெறும். 

அதனைத் தொடர்ந்து, அதே நாள் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, பெரஹெர நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் 'பெரஹெர விஞ்ஞாபனம்' தியவடன நிலமேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் பிரதி செயலாளர் மஹவெல ரத்தனபால தேரர், நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278