Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
அவந்திகாவுக்கு இரண்டு தாலி கட்டிய மாப்பிள்ளை!

Jun 30, 2026 - 11:33 AM

அவந்திகாவுக்கு இரண்டு தாலி கட்டிய மாப்பிள்ளை!
Mobitel Inner 1278

நடிகை அவந்திகா சுந்தருக்கும், காதலர் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் ஜூன் 26 ஆம் திகதி கோவாவில் திருமணம் நல்லபடியாக நடந்தது. திருமணத்தில் மணமகள் அவந்திகாவை தவிர அனைவரும் தங்க நிற உடையில் வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஷ்ரவனும் தங்க நிற வேட்டி சட்டை தான் அணிந்திருந்தார். அவந்திகா மட்டும் பிங்க் நிற சேலை கட்டி இருந்தார். 

அவந்திகாவுக்கு ஒன்றல்ல இரண்டு முறை தாலி கட்டினார் ஷர்வன் சீனிவாசன். முதலில் மஞ்சள் கயிற்றால் ஆன தாலியில் மூன்று முடிச்சு போட்டார். அதன் பிறகு தங்கச் செயினால் ஆன தாலியை அவந்திகாவின் கழுத்தில் போட்டார். தாலி கட்டியதும் மாப்பிள்ளையால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். அதை பார்த்த அவந்திகாவோ என்ன மாப்ள என்பது மாதிரி சிரித்தார். உறவினர்களோ ஷ்ரவனை சமாதானம் செய்தார்கள். 

அந்த காதல் திருமணத்தில் அழுதது ஷ்ரவன் சீனிவாசன் மட்டும் அல்ல மணமகளின் அம்மா குஷ்பு சுந்தர் மற்றும் தங்கை அனந்திதாவும் தான். அவந்திகாவும், அனந்திதாவும் ரொம்ப பாசமான சகோதரிகள் ஆவர். இந்நிலையில் தன் அக்காவுக்கு அவர் ஆசைப்பட்டபடி திருமணம் முடிந்த சந்தோஷத்தில் அழுதார் அனந்திதா. மேலும் சந்தோஷமாக இருந்தால் அனந்திதாவுக்கு தானாக கண்ணீர் வந்துவிடும். இதை அவரே சொல்லியிருக்கிறார். 

முன்னதாக விஜய்யை முதல் முறை பார்த்தபோது கூட சந்தோஷத்தில் தான் இரண்டு நிமிடம் அழுததாக தெரிவித்தார் அனந்திதா என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்புவோ தன் மகள் ஒரு வீட்டு மருமகளான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார். திருமணம் நடந்த இடத்திற்குள் தன் செல்ல மகன் லியோ சுந்தர் உடன் வந்தார் அவந்திகா. 

தான் ஆசையாக வளர்க்கும் நாய் லியோவை மகனாகவே பார்க்கிறார் அவர். அதனால் தான் மணமேடையில் தன் அருகிலேயே லியோவை அமர வைத்தார். அதை பார்த்த செல்லங்கள் பிரியர்களோ, அவந்திகாவுக்கு ரொம்ப பெரிய மனசு. உறவினருக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லம் லியோ சுந்தரை அமர வைத்திருக்கிறார். இந்த பெண் ரொம்ப நல்ல பெண் என்றார்கள். 

அவந்திகாவும், ஷ்ரவனும் காதலித்து வந்த நிலையில் கணவன், மனைவி ஆவது என்று முடிவு செய்து தங்களின் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்கள். இரு வீட்டிலும் பச்சைக் கொடி காடி நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். குஷ்பு மீது காதல் வந்துதம் அதை சுந்தர் சி. எப்படி வெளிப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். 

ரொம்ப அன்ரொமான்டிக் ஃபெல்லோ என் கணவர் என குஷ்புவே அந்த ப்ரொபோசல் குறித்து தெரிவித்திருக்கிறார். அன்பே குஷ்பு, ஐ லவ் யூ என்று சொல்லி ரோஜாப்பூ எல்லாம் கொடுக்கவில்லை. ஒரு ஹோட்டல் மாடியில் தண்ணீர் தொட்டி அருகில் நின்ற குஷ்புவை பார்த்து, நாளைக்கு நமக்கு புள்ள பிறந்தா யார் மாதிரி இருக்கும் என கேட்டிருக்கிறார். அது தான் சுந்தர் சி.யின் மாத்தி யோசித்த ப்ரொபோசல். 

மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசன் அவந்திகாவிடம் எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கிடையே பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் அட்டாக்கர் படத்தில் நடிக்கிறார் அவந்திகா. அது தான் அவரின் முதல் தமிழ் படமாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278